கன்னி ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: இந்த ஆண்டாவது வாழ்க்கை மாறுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கன்னி ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: இந்த ஆண்டாவது வாழ்க்கை மாறுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கன்னி ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: இந்த ஆண்டாவது வாழ்க்கை மாறுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 10, 2024 03:10 PM IST

New Year 2025: 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கன்னி ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

கன்னி ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: இந்த ஆண்டாவது வாழ்க்கை மாறுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்!
கன்னி ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: இந்த ஆண்டாவது வாழ்க்கை மாறுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கன்னி ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

கன்னி ராசி பொது பலன்கள்

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றி அடையும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள் மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். 

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். விரும்பிய நிறுவனங்களில் வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவ்வப்போது நிதி இழப்புகளும் ஏற்படக்கூடும். தொலைதூரப் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மனைவியால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

வேலை மற்றும் தொழில்

இந்த 2025 புத்தாண்டு அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். அதிக பணிச்சுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேலை செய்தால் போதும் தனியார். துறையில் வேலை செய்பவர்களுக்கு சிறப்பான காலமாக இது இருக்கும். 

உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். தொடர்பு திறனை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சக ஊழியர்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்க உதவிகள் உங்களைத் தேடி வரும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். விண்வெளி துறையில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து நிதி தொடர்பான தொழில்கள் மீது முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

இந்த 2025 புத்தாண்டு திருமண தம்பதிகளுக்கு இடையே இணக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமனை தம்பதிகளுக்கு ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். மார்ச் மாதத்தில் இருந்து வாழ்க்கைத் துணையோடு நேரம் ஒதுக்குவது சட்ட சிக்கல்களாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து தம்பதிகளுக்கு இடையே பாசம் அதிகரிக்கும். திருமண உறவுகளில் சில மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்தால் மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு இனிமையான பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மனைவிக்கு பல பரிசுகளை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பிறகு திருமண பேச்சு வார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் திருமணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner