சிம்ம ராசிக்காரர்களே.. புத்தாண்டு 2025 சிம்ம ராசிபலன்: இந்த 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்.. வாங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சிம்ம ராசிக்காரர்களே.. புத்தாண்டு 2025 சிம்ம ராசிபலன்: இந்த 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்.. வாங்க..!

சிம்ம ராசிக்காரர்களே.. புத்தாண்டு 2025 சிம்ம ராசிபலன்: இந்த 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்.. வாங்க..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 10, 2024 10:44 AM IST

New Year Rasi Palan: 12 ராசிகளுக்கும் பல மாற்றங்கள் இந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்படப் போகின்றது. அந்த வகையில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசிக்காரர்களே.. புத்தாண்டு 2025 சிம்ம ராசிபலன்: இந்த 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்.. வாங்க..!
சிம்ம ராசிக்காரர்களே.. புத்தாண்டு 2025 சிம்ம ராசிபலன்: இந்த 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்.. வாங்க..!

மகிழ்ச்சியாக இருந்தவர்கள் இந்த மகிழ்ச்சி இன்னும் தொடர வேண்டும். என எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். கஷ்ட சூழ்நிலையை அனுபவித்தவர்கள். வரும் ஆண்டாவது நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். பலரும் பலர் எதிர்பார்ப்புகளோடு இந்த 2025 ஆம் ஆண்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக நிலைகள் எப்படி அமைகின்றதோ அப்படித்தான் ஒருவரின் வாழ்க்கை இருக்கும் என கூறப்படுகிறது. பெரிய கிரகங்களாக கூறப்படும். குரு சனி ராகு கேது இவர்கள் அனைவரும் தங்களது இடத்தை இந்த ஆண்டில் மாற்றுகிறார்கள். அது பலருக்கும் பல யோக பலன்கள் அல்லது அசுப பலன்கள் உள்ளிட்டவைகளை கொடுக்க காத்திருக்கின்றது.

இந்த புத்தாண்டு சில ராசிகளுக்கு சாதகமாக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகின்றது. சில ராசிக்காரர்கள் கலவையான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். 12 ராசிகளுக்கும் பல மாற்றங்கள் இந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்படப் போகின்றது. அந்த வகையில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

உடல் ஆரோக்கியம்

இந்த 2025 ஆம் ஆண்டை பொருத்தவரை உங்களுக்கு மிகவும் சிக்கலான சூழ்நிலைகள் இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். சனி பகவானின் பார்வை ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு உடல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

மார்ச் மாதத்திற்கு பிறகு சனிபகவான் இடம் மாறுகின்ற காரணத்தினால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும் நடை பயிற்சி உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

குரு பகவானின் தாக்கமானது உங்கள் லாப வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் அவ்வப்போது சிக்கல்கள் குறைய கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கக்கூடும். கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

திருமண வாழ்க்கை

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல காலமாக அமைந்துள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகொடும். திருமணம் ஒப்பந்தம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் காதல் வாழ்க்கை திருமணமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் சென்றால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தம்பதிகளுக்கு இடையே சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்

இந்த 2025 ஆம் ஆண்டு பொறுத்த வரை உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. மார்ச் மாதம் வரை சனி பகவான் உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். சனி பகவான் மார்ச் மாதத்திற்கு பிறகு இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். 

வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணம் இருந்தால் அதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தற்போது எந்த நிலையில் இருக்கின்றதோ அப்படியே பயணிப்பது உங்களுக்கு முன்னேற்றத்தைப் பெற்று தரும். கடன் வாங்குவதை தவிர்த்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்

விநாயகர் மற்றும் சிவபெருமானை வழிபட்டால் உங்களுக்கு பல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். பெருமாள் கோயிலுக்கு சென்று தானம் செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை வழிபட்டால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner