’மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களே!’ தசரா திருநாளில் இதை தானம் செய்தால் அதிர்ஷ்டத்தை அள்ளலாம்!
Oct 11, 2024, 09:13 PM IST
நவராத்திரி வழிப்பாட்டை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரியவை. 10வது நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
நவராத்திரி பண்டிகையின் 9ஆவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், 10ஆவது நாளில் தசரா பண்டிகையும் கொண்டாடப்படுகின்றது.
சமீபத்திய புகைப்படம்
வீரத்தின் அடையாளமாக விளங்கும் துர்கா தேவியையும், செல்வத்தின் அடையாளமாக விளங்கும் மகா லட்சுமி தேவியையும் கல்வியின் அடையாளமாக விளங்கும் சரஸ்வதி தேவியையும் வழிபடும் தினங்களாக நவராத்திரி பண்டிகை அமைகின்றது. இந்த 9 நாட்களிலும் முப்பெரும் தேவியரை வழிபாடு செய்தால் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை முறையாக கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும்.
நவராத்திரி வழிப்பாட்டை பொறுத்தவரை முதல் மூன்று நாட்கள் துர்க்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரியவை. 10வது நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஸ்ரீ ராமரை 'ஓம் ராமபத்ராய நம' என்று சொல்லி கோதுமையை தானம் செய்வதன் மூலம் நன்மைகளும், அனுகூலங்களும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் அனுமனை 'ஓம் ஆஞ்சநேயாய நம' என்று சொல்லி அரிசியை தானம் செய்வதன் மூலம் நன்மைகளும், அனுகூலங்களும் உண்டாகும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் ராமருக்கு கடலைமாவு லட்டுகளை நெய்வைத்தியம் செய்து. ஏழைகளுக்கு பச்சை பயிறை தானம் செய்வதன் மூலம் நன்மைகள் மற்றும் அனுகூலங்களை பெற முடியும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் சீதா ராமருக்கு இனிப்பு வெற்றிலையை படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பால் தானம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தி தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ராமரை 'ஓம் ஜனார்தனாய நம' என்ற ஸ்லோகம் செல்லி வழிபாடு செய்து வெல்லம் மற்றும் வேர்கடலையை தானம் செய்வது நன்மைகளை உண்டாக்கி தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 'ஓம் ஷர்வாய நம' என்ற மந்திரம் சொல்லி வழிபாடு செய்து பச்சை நிற ஆடைகளை தானம் செய்வதன் மூலம் நன்மைகளை பெற முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ராமருக்கு தேன் படையல் செய்து வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்யும் போது மிகுந்த நன்மைகளை பெற முடியும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் அனுமனுக்கு மல்லிகை மலரை கொண்டு வழிபாடு செய்து ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது அனுகூலங்களை உண்டாக்கி தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ’ஓம் தண்டாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து மஞ்சள் நிற ஆடைகளை தானம் செய்வது நன்மைகளை உண்டாக்கி தரும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தசரா நாளில் சீதை மற்றும் ராமரை வழிபாடு செய்த பின்னர் ஏழைகளுக்கு காலணிகளை தானம் செய்வது நன்மைகளை உண்டாக்கி தரும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தசரா நாளில் 'ஓம் வாயுபுத்ராய நம' என்று மந்திரம் சொல்லி வழிபட்ட பின்னர் நீல நிற ஆடைகளை தானம் செய்வது மிகுந்த அனுகூலங்களை உண்டாக்கி தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ராமரை வழிபாடு செய்த பின்னர் வாழைப்பழம் மற்றும் பப்பாளியை தானம் செய்வது நன்மைகளை உண்டாக்கி தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.