’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்க அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
- நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
- நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
(1 / 13)
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை பார்த்து ஒருவரின் எதிர்காலத்தை எளிதாகக் கணிக்க முடியும். நமது ராசியின் அடிப்படையில் ரத்தினத்தை அணிந்தால், நமது எதிர்காலத்தை பெரிய அளவில் மேம்படுத்தலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ரத்தினக் கற்கள் ஒரு நபரை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன.
(2 / 13)
மேஷம்:காலபுருஷனின் முதல் வீடாக விளங்கும் மேஷம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். நிலம், தைரியம், வீரம், ரத்தம் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானுக்கு உரிய ராசி கல்லாக பவளம் உள்ளது.
(3 / 13)
ரிஷபம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். சுக்கிர பகவானுக்கு உரிய ராசிகல்லாக வைரம் உள்ளது.
(5 / 13)
கடகம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சந்திர பகவான் உள்ளார். சந்திர பகவானுக்கு உரிய ரத்தினமாக முத்து உள்ளது.
(6 / 13)
சிம்மம் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் உள்ளார். இந்த ராசிக்காரர்கள் மாணிக்கம் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெறலாம்.
(7 / 13)
கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். இவர்கள் பச்சை மரகத கற்கள் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
(8 / 13)
துலாம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். வைர மோதிரம் அணிவதன் மூலம் சுக்கிரனின் அருளையும், ஆசியையும் பெற முடியும்.
(9 / 13)
விருச்சிகம் ராசிக்காரர்கள் சிவப்பு நிற பவளத்தை அணியும் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெற முடியும்.
(10 / 13)
குரு பகவானுக்கு உரிய கல்லாக மஞ்சள் நிற புஷ்பராகம் உள்ளது. இதனை அணியும் போது வாழ்கையில் ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.
(11 / 13)
மகர ராசிக்கு உரிய கிரகம் ஆக சனி பகவான் உள்ளார். உழைப்பு, நீதி, நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக சனி பகவான் உள்ளார். சனி பகவானுக்கு உரிய கற்களாக நீலக்கல் உள்ளது. நீலக்கல் அணிந்தால், பணவரவு, ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொடுக்கும்.
(12 / 13)
கும்பம் ராசியின் அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசியை போலவே கும்பம் ராசியினரும் நீலக்கல் அணிவதன் மூலம் நிதி சார்ந்த நன்மைகள், ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டத்தை பெற முடியும்.
மற்ற கேலரிக்கள்