மனம் வருந்திய சிவ பக்தர்.. தவிர்த்து சென்ற சிவனடியார்.. கோயில் கொண்ட விஸ்வநாதர்.. ஆசி வழங்கும் சிவபெருமான்
Oct 16, 2024, 06:00 AM IST
Vishwanath:
Vishwanath: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு இந்தியாவில் வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவ பெருமான் வைத்திருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய ஆளுமை நாயகனாக கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
இந்த உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஆதி கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் பல மன்னர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார்.
எதிரிகளாக மண்ணுக்காக பல மன்னர்கள் போரிட்டு வந்தாலும் ஒருபுறம் சிவபெருமானின் மீது தாங்கள் கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் இன்று வரை கலைநயமிக்க களஞ்சியமாக திகழ்ந்து வருகின்றது.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சிவபெருமான் மீது அதீத பக்தியை அந்த மன்னர்கள் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த எத்தனையோ கோயில்கள் இங்கு காணப்படுகின்றன. அந்த சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் கண்ணாபட்டி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தல விருச்சமாக வில்வமரம் விளங்கி வருகிறது. புனித தீர்த்தம் உத்திரவாகினி என அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலுக்கு எதிரே வைகை நதி ஓடுகிறது. வைகை நதி இந்த ஊரில் நேற்றிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்கிறது ஆனால் கோயிலுக்கு அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு பக்கம் நோக்கி பாய்கின்றது அதுவே மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் மரண பயம், பாவம், பிறவி முக்தி அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாக தோஷம் இருப்பவர்கள் இந்த கோயிலில் வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதிகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
ஒரு காலத்தில் இந்த பகுதியில் மிகப்பெரிய சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவனடியார் ஒருவருக்கு உணவு பரிமாறிய பிறகு தான் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஒருமுறை உணவு உண்ணும் வேளையில் அவரது கண்ணில் எந்த சிவனடியாரும் படவில்லை.
உடனே தனது பணியாளரை ஊருக்குள்ள அனுப்பி யாரேனும் சிவன் அடியார் அங்கு இருந்தால் அழைத்துவா என கூறியுள்ளார். பணியால் ஊருக்குச் சென்று பார்க்கையில் வைகை நதி அருகே சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்தார். உடனே சிவ பக்தரின் பணியாளர் வந்து சிவனடியாரை பார்த்த தகவலை கூறினார்.
உடனே சிவ பக்தர் அங்கு சென்று சிவனடியாரை அழைத்துள்ளார். உடனே அந்த சிவனடியார் நான் சிவ தரிசனம் செய்த பிறகு சாப்பிடுவது வழக்கம் எனக் கூறியுள்ளார். அதன் காரணமாக என்னை ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்படி சிவனடியார் சிவபக்தரிடம் கூறியுள்ளார்.
அப்போது அங்கு எங்கும் சிவபெருமான் கோயில் இல்லை. இதனை உணர்ந்த சிவ பக்தர் இங்கு எங்கும் சிவபெருமானுக்கு கோயில் கிடையாது எனக் கூறியுள்ளார். உடனே சிவனடியார் சிவபெருமானுக்கு கோயில் இல்லாத ஊரில் எந்த உபசரிப்பையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார்.
இதனால் வருத்தம் அடைந்த சிவனடியார் உடனே காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு விசுவநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அம்பிகைக்கு சன்னதி அமைக்கப்பட்டு விசாலாட்சி அங்கு கோயில் கொண்டார்.