தடையை மீறிச்சென்ற சிவபக்தர்.. ஓய்வு இடத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்.. ஆசி வழங்கும் ஏகாம்பரேஸ்வரர்
Ekambareswarar: சென்னை மாவட்டம் சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Ekambareswarar: கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார் உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கோயில்கள் அமைக்கப்பட்டு சிவ பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானின் மீது அடிமையாக இருக்கும் எத்தனையோ பக்தர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர். வாரணாசி, மும்பை, இமயமலை உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிவபெருமானை வழிபடும் சித்தர்கள் மற்றும் யோகிகள் எத்தனையோ பேர் இன்று வரை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
சிவபெருமானை தொழுது வந்தால் வாழ்க்கையில் மோட்சம் கிடைக்கும் என சிவ பக்தர்கள் கூறி அனைவரும் கேட்டதுண்டு. இந்த பயணம் தற்போது தொடங்கப்படவில்லை உலகத்தில் மனித உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து இப்படி சிவபெருமான் மீது எத்தனையோ வழிபாடு முறை இருந்து வந்துள்ளன.
ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணை ஆண்ட வந்த மன்னர்கள் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர் தற்போது காணப்படக்கூடிய எத்தனையோ மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்கள் அவர்களாலே எழுப்பப்பட்டது. சில கோயில்கள் தற்போது வரை யாரால் கட்டப்பட்டது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த அளவிற்கு பல வரலாறுகளைக் கொண்டு பல ஆண்டுகளைக் கடந்து தற்போது வரை கம்பீரமாக அந்த கோயில்கள் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய அம்பாள் ஆவுடையார் மீது நின்ற கோளத்தில் காட்சி கொடுத்து வருகிறார். இந்த உலகத்தில் நானும் பெண்ணும் சமம் என்பதில் நிரூபிப்பதற்காகவே சிவபெருமான் போலவே அம்பாலும் ஆவுடையார் மீது நின்ற கோளத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.
இந்த திருக்கோயிலில் வந்து வழிபட்டால் சனிபகவானால் ஏற்பட்டிருக்க கூடிய தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதேபோல இந்த கோயிலில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்த வருகிறது.
தல வரலாறு
மிகப்பெரிய சிவ பக்தர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு இருக்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக இருந்து வந்துள்ளார். எப்போதும் வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதை இவர் வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
ஒருமுறை இவர் பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளது. பணியில் ஏற்பட்ட சிறிய தொந்தரவு காரணமாக அந்த பக்தரின் முதலாளி கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்துள்ளார். இருப்பினும் அந்த சிவபக்தர் கோயிலுக்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் சோர்வு அடைந்து தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் ஓய்வெடுத்துள்ளார். உடனே சிவபெருமான் அம்பாளோடு அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். இனி என்னை வழி விடுவதற்கு இத்தனை தூரம் வரவேண்டிய அவசியம் கிடையாது. நீ ஓய்வெடுத்த இடத்திலயே நான் சுயம்புவாக காட்சி கொடுத்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். உடனே அந்த சிவ பக்தர் இந்த இடத்திலேயே வழிபாடு செய்துள்ளார். தற்போது அந்த இடத்தில் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதாக தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.