விஷத்தை உமிழ்ந்த வாசுகி நாகம்.. காப்பாற்ற விஷத்தை அருந்திய சிவபெருமான்.. ஆசிர்வாதம் தரும் நஞ்சுண்டேஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விஷத்தை உமிழ்ந்த வாசுகி நாகம்.. காப்பாற்ற விஷத்தை அருந்திய சிவபெருமான்.. ஆசிர்வாதம் தரும் நஞ்சுண்டேஸ்வரர்

விஷத்தை உமிழ்ந்த வாசுகி நாகம்.. காப்பாற்ற விஷத்தை அருந்திய சிவபெருமான்.. ஆசிர்வாதம் தரும் நஞ்சுண்டேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 14, 2024 06:00 AM IST

Nanjundeswarar: சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.

விஷத்தை உமிழ்ந்த வாசுகி நாகம்.. காப்பாற்ற விஷத்தை அருந்திய சிவபெருமான்.. ஆசிர்வாதம் தரும் நஞ்சுண்டேஸ்வரர்
விஷத்தை உமிழ்ந்த வாசுகி நாகம்.. காப்பாற்ற விஷத்தை அருந்திய சிவபெருமான்.. ஆசிர்வாதம் தரும் நஞ்சுண்டேஸ்வரர்

உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்த வருகின்றார். ஆதிக்கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு அன்றிலிருந்து இன்று வரை பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது.

சிவபெருமானை வழிபடுவது மட்டுமே சிறந்த வேலையாக கொண்டு எத்தனையோ சிவ பக்தர்கள் நமது இந்தியாவில் வாழ்ந்த வருகின்றனர். மன்னர்கள் காலத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்கள் மண்ணுக்காக எத்தனையோ போர்களை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

ஒருபுறம் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது சிவ பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் வரலாற்று சரித்திர குறியீடாக கம்பீரமாக நின்று வருகின்றன.

சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் எனவும் தாயார் லோகநாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. குறிப்பாக இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் மற்ற கோவில்களில் இருப்பது போல் அல்லாமல் சற்று பட்டையாக இருக்கும்.

குறிப்பாக இந்த சிவலிங்கம் செந்நிறமாக காட்சி அளிக்கும். இது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பிரதான ஆவுடையார் மட்டுமல்லாமல் சிவலிங்கத்தை சுற்றி தரைப்பகுதியில் ஆவுடையார் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் இரண்டு ஆவுடையார் மீது காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இந்த திருக்கோயிலில் சிவபெருமான் சன்னதியில் சுற்றி எட்டு ஆண்கள் கோஷ்டத்தில் சிவபெருமானை தாங்கி பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் இருக்கும்.

தல வரலாறு

பாற்கடலை தேவர்கள் மற்றும் அசுரர்கள் இரு குழுவினரும் சேர்ந்து அமுதம் பெறுவதற்காக கடைந்துள்ளன. அப்போது வாசுகி நாகம் மத்து கடைவதற்காக பயன்படுத்தப்பட்டது. அதிக உழைப்பின் காரணமாக வேதனையுற்ற வாசுகி நாகம் தனது விஷத்தை உமிழ்ந்தது. அந்த விஷம் பாற்கடலில் பரவிய காரணத்தினால் தங்களை காப்பாற்றும் படி தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் வாசுவின் நாகம் மிகுந்த விஷத்தை விழுங்கினார். அப்போது அவரது உடல் நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இது முழுமையாக சென்றால் ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தினால் பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்கு செல்லாமல் நிறுத்திவிட்டார்.

வாசுவின் நாகத்தின் விஷமானது சிவபெருமானின் கழுத்திலேயே தங்கிவிட்டது. இந்த நிகழ்வை குறிப்பிடுவதற்காகவே இங்கு சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தேவர்களின் வேண்டுதலின் பேரில் சிவபெருமான் விஷத்தை உண்ட காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். அதேபோல் இவருக்கு திருநீலகண்டன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

Whats_app_banner