தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Leadership Astrology: ’தலைமை பொறுப்பை ஏற்கும் யோகம் எந்த ராசிக்கு?’ ஜாதக ரீதியான பலன்கள் இதோ!

Leadership Astrology: ’தலைமை பொறுப்பை ஏற்கும் யோகம் எந்த ராசிக்கு?’ ஜாதக ரீதியான பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil

Apr 20, 2024, 03:36 PM IST

google News
”ஒரு ஜாதகத்தில் உச்ச வலுவுடன் மூன்று கிரகங்கள் இருந்தால் தலைமை பொறுப்பு ஏற்க தகுதி உடையவர் ஆகிறார்”
”ஒரு ஜாதகத்தில் உச்ச வலுவுடன் மூன்று கிரகங்கள் இருந்தால் தலைமை பொறுப்பு ஏற்க தகுதி உடையவர் ஆகிறார்”

”ஒரு ஜாதகத்தில் உச்ச வலுவுடன் மூன்று கிரகங்கள் இருந்தால் தலைமை பொறுப்பு ஏற்க தகுதி உடையவர் ஆகிறார்”

கிரகங்கள் நமது வாழ்வியலில் அதிசயங்களை நிகழ்த்தக் கூடியவை. இந்த கிரகங்களின் தன்மையால்தான் ஒரு மனிதன் வாழ்வது, வீழ்வது, மகிழ்ச்சியை பெறுவது, துக்கத்தை பெறுவது, மரணத்தை சந்திப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படுகிறது. 

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

ஒரு மனிதன் ஒரு கூட்டத்திற்கோ, நாட்டுக்கோ, நிறுவனத்திற்கோ, விளையாட்டுக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ  தலைவராக இருப்பதையும் கிரகங்கள்தான் தீர்மானம் செய்கின்றன என்கிறார் ஜோதிடர் ராம்ஜி. 

ஒரு ஜாதகத்தில் சில கிரகங்களின் அளவீடுகளின் அடிப்படையிலேயே ஒரு மனிதன் உயர் நிலைகளை படிப்படியாக பெறுகின்றனர். 

ஒருவர் தலைமை பொறுப்பை அடைய உங்கள் ஜாதகத்தில் குறைந்த பட்சம் மூன்று ஜாதகங்கள் ஆவது ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் அல்லது திக்பலம் பெற்று இருப்பது அவசியம். 

உதாரணமாக ஒரு சிம்ம லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், சிம்ம லக்னத்திற்கு லக்னத்திலேயே சூரிய பகவான் ஆட்சியாக உள்ளார்.  இரண்டாம் இடத்தில் புதன் உச்சம், மூன்றாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி இருந்தால் இந்த ஜாதகம் தலைமை பொறுப்பை அலங்கரிக்கத் தகுதி உள்ள ஜாதகமாக இருக்கும். 

சரியான பருவம், சரியான காலத்திற்குள் இந்த ஜாதகர் ஒரு நிறுவனத்திற்கோ, அல்லது வேறு அமைப்புக்கோ தலைமை ஏற்கும் நிலையை இவர் அடைவார். 

இரண்டாவது உதாரணமாக மீன லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், மீன லக்னத்திலேயே குரு பகவானும், புதனும் சேர்ந்து இருக்கின்றனர். இதில் புதனுக்கு திக்பலம் கிடைத்துவிடும். அதோடு நீசபங்கமும், குருவுக்கு ஆட்சியும் கிடைத்துவிடும். 

இவருக்கு 5ஆம் இடத்தில் வளர்பிறை சந்திரன் ஆட்சி பெற்று, 2ஆம் இடத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால், ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர் ஆக தகுதி பெற்ற ஜாதகமாக இது விளங்கும். 

ஒரு தனுசு லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், 8ஆம் இடத்தில் குரு உச்சம், சந்திரன் 6ஆம் இடத்தில் உச்சம், 2க்கு உடைய சனி உச்சமாக இருந்தால் வெளிநாட்டு நிறுவனத்தை கட்டிக்காகும் அமைப்பு இந்த ஜாதகருக்கு கிடைக்கும். இந்த ஜாதக அமைப்பில் கிரகங்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மூன்று கிரகங்களுக்கு மேற்பட்டு வலுவடையும் போது மேலும் பலன்களை அடைய முடியும். 

கன்னி லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்னத்திலேயே குரு பகவான் திக்பலம் அடைகிறார்.  7ஆம் இடத்தில் சனி, 10ஆம் இடத்தில் செவ்வாய்,  விருச்சிகத்தில் ராகு உச்சம் பெற்றாலும் இவர்களுக்கு தலைமை பொறுப்பு தேடி வரும். 

கும்ப லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்னாதிபதி சனி பகவான் 9ஆம் இடத்தில் உச்சம் பெற்று, 7ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று, சந்திரனும் உச்சம் பெற்றாலும் தலைமை பதவியை ஜாதகர் சுவைப்பார். 

ஒரு ஜாதகத்தில் உச்ச வலுவுடன் மூன்று கிரகங்கள் இருந்தால் தலைமை பொறுப்பு ஏற்க தகுதி உடையவர் ஆகிறார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி