தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’சிம்மம் முதல் விருச்சிகம் வரை!’ ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்! உங்க வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

’சிம்மம் முதல் விருச்சிகம் வரை!’ ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்! உங்க வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 11:04 AM IST

“லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்”

ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!
ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

சந்திரன் எந்த ராசியில் இருக்கும் போது நாம் பிறக்கிறோமோ அதுதான் ராசி, அவர் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுதான் நமது ஜென்ம நட்சத்திரம்.

சூரியனின் ஒளி ஒரு நாளில் 12 லக்னங்களின் மீதும் குவிக்கப்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்பது இதில் தோராய கணக்காகும்.

லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்.

ராசியும், லக்னமும் ஒன்றானால் அந்த கிரகத்தின் வலிமை அதிகப்படியாக உங்களுக்கு கிடைக்கும். தெளிவான சிந்தனைகள், செயல் திறன், தீர்க்கமாக முடிவெடுத்தல் ஆகிய குணாதிசயங்கள் இருக்கும்.

சிம்ம ராசி - சிம்ம லக்னம்

சிம்ம ராசி - சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரம், பதவி, தலைமை பொறுப்பு தேடி வரும். விருத்தி, தன்னை சார்ந்தவர்களை கட்டிக்காப்பது, தலைமை பொறுபில் வெற்றி பெறுவது உள்ளிட்ட நிறைய  நல்ல பலன்கள் கிடைக்கும். 

சூரியன் நட்பு வீடுகளில் அமைந்தலோ, அல்லது ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் போன்ற அமைப்பை பெற்றால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். 

அரசியல், அதிகாரம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உங்கள் ஆளுமையை பெற்றுவிட முடியும். ஆனால் சூரியனுடன் பாவிகள் தொடர்பு ஏற்பட்டால் வீண் சர்ச்சை, சர்ச்சரவு, சிக்கல்கள் ஏற்படும். 

கன்னி லக்னம் - கன்னி ராசி 

நளினம், சமயோஜித புத்தி, அதிக அறிவு, கல்வியால் உயர்நிலை அடைவது, எல்லோரையும் அனுசரித்து செல்வது உள்ளிட்ட தன்மைகள் கன்னி ராசி - லக்னக்காரர்களுக்கு இருக்கும். 

பெண்களால் ஆதாயம், சொத்துப்பத்துக்களால் ஆதாயம், பூமியால் லாபம், சேவைத் தொழில்களில் வெற்றி உள்ளிட்டவை இவர்களுக்கு கிடைக்கும்.  

மக்களுக்கும் அரசுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்துவது, எல்லோரையும் அனுசரித்து செல்வது  உள்ளிட்ட செயல்பாடுகளால் நன்மை பெறுவார்கள். தாய், தாரம், சகோதரிகள் மூலம் இவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 

ஆனால் நண்பர்களால் ஏமாற்றப்படுவது, அடைவது, சுயதொழில் மூலம் நஷ்டம் ஏற்படுவது, நடு வயதுகளில் கடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்வது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரலாம். 

துலாம் ராசி - துலாம் லக்னம்

துலாம் லக்னம் - துலாம் ராசியை பொறுத்தவரை வியாபார லக்னமாக உள்ளதால் லாபமே குறிக்கோளாக செயல்படுவார்கள். தன்னுடைய சுகமேன்மை, தன்னை சார்ந்தவர்களின் சுக மேன்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவர்கள். 

வாழ்வியல் போராட்டங்களை சந்திக்கும் விதி இயற்கையாகவே வரும். தொழில், விருத்தி, முன்னேற்றம், காசு பணத்தை நோக்கி இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். எந்த பிரச்னைகளிலும் சிக்கி கொள்ளாமல் இருப்பது இவர்களின் அடிப்படை குணம் ஆகும். 

இவர்களுக்கு எல்லாவிதத்திலும் ஜடத்தன்மை வெளிப்படும், சக உறவுகளிடம் பிரச்னைகள் ஏற்படும். 

விருச்சிகம் ராசி - விருச்சிகம் லக்னம்

விருச்சிகம் ராசி - விருச்சிகம் லக்னம் அமைவது ஒரு விதத்தில் ராஜயோகம் என்று சொல்லலாம். சூழ்ச்சியான,  சூச்சமமான லக்னமாக விருச்சிகம் உள்ளது. 

செவ்வாயின் பெண் வீடான இது, மௌன ராசியாகும். மிகப்பெரும் தொழில் அதிபர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள்.  நாட்டை ஆள்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். 

கிரகங்கள் மோசமாக அமைந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு தண்டனைகளை பெரும் சிக்கல்களும் உள்ளதால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். ரகசியமான நடவடிக்கைகள் இவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். அதன் மூலம் ஆதாயம் தேடும் விதிகள் இருக்கும். நாட்டின் முக்கிய ரகசியங்களை காப்பாற்றும் நபர்களாக இருவர்கள் இருப்பார்கள். அதே நேரத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்