தமிழ் செய்திகள்  /  புகைப்பட  /  Sun Transit: மேஷ ராசிக்குச் செல்லும் சூரிய பகவான்.. இந்த ராசியினருக்கு காதல் வாழ்வில் பிரச்னை வரலாம்!

Sun Transit: மேஷ ராசிக்குச் செல்லும் சூரிய பகவான்.. இந்த ராசியினருக்கு காதல் வாழ்வில் பிரச்னை வரலாம்!

Marimuthu M HT Tamil
Apr 06, 2024 09:39 PM IST

Sun Transit: மேஷ ராசிக்குச் செல்லும் சூரிய பகவானால், இல்வாழ்க்கைத்துணை இடையே சில ராசியினருக்குப் பிரச்னை உண்டாகலாம்.

சூரிய பகவான்.
சூரிய பகவான்.

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவானின் இந்தப் பெயர்ச்சி உறவுகளைப் பொருத்தவரை நன்றாக இருக்காது. சூரிய பகவானின் மாற்றம் சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். காதல் மற்றும் திருமண உறவுகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள், சூரியப் பெயர்ச்சிக்குப் பின்பு, தங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் தாம்பத்திய துணைக்கும் இடையில் சில பிரச்னைகள் எழக் கூடும். 

கணவன் - மனைவியாக இருந்தால், இருவருக்கும் இடையே பிரச்னை வந்து போகும். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் சூரியனின் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் தங்கள் இல்லறத் துணையிடம் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அதனைத்தொடர்ந்து உங்களுக்கு உங்கள் குடும்பம் முக்கியமா அல்லது இல்லறத்துணை முக்கியமா என்னும் குழப்பம்கூட வரலாம். எனவே, ரிஷப ராசியினர், நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

மகரம்: சூரிய பகவானின் பெயர்ச்சிக்குப் பின், மகர ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு உறவுச் சிக்கல்கள் நிறைய அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் மனம் விரக்தியால் நிரப்பப்படலாம். உங்களுக்கும் உங்கள் இல்லறத்துணைக்கும் இடையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையே மனதளவிலும் உடல் அளவிலும் இடைவெளி உருவாகலாம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் இருவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். இந்த நேரத்தில், மகர ராசியினர் மிகப்பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையெல் பிரியும் சூழல் உண்டாக வாய்ப்புள்ளது. 

மீனம்: மீன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் சூரியனின் பெயர்ச்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன், உங்கள் வாக்குவாதம் மிகவும் அதிகரிக்கக்கூடும். இதனால் பிரிந்துபோகும் சூழ்நிலைகூட உண்டாகக் கூடும். உங்கள் உறவில் தவறான புரிதலுக்கான அறிகுறிகள் உள்ளன. இல்வாழ்க்கைத்துணையுடன் உங்களுக்கு மனக்கசப்பு அதிகரிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்னைகள் வரயிருப்பதால், உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். உங்கள் இல்லற வாழ்வை மேம்படுத்த, உங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். இல்லையென்றால், வம்பு வழக்குகள் உண்டாகி கோர்ட் வரை கூட செல்லலாம். 

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்