தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: இது சாப்பாடா?.. மேனஜரை வெளுத்த கார்த்திக்; ரியா, மதுவை பார்த்த மீனாட்சி! - பரபரக்கும் கார்த்திகை தீபம்

Karthigai Deepam: இது சாப்பாடா?.. மேனஜரை வெளுத்த கார்த்திக்; ரியா, மதுவை பார்த்த மீனாட்சி! - பரபரக்கும் கார்த்திகை தீபம்

Kalyani Pandiyan S HT Tamil
Apr 20, 2024 12:44 PM IST

மேனேஜர் இங்க சாப்பாடு இப்படித்தான் இருக்கும்… ஏன் எதுக்குன்னு கேட்கக்கூடாது, நாங்க போடுறதை தான் சாப்பிடணும் என்று திமிராக பேச, ஓனரை கூப்பிடுங்க என்று சத்தம் போடுகிறான் கார்த்திக்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இது சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று கார்த்திக் மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

மேனேஜர் இங்க சாப்பாடு இப்படித்தான் இருக்கும்… ஏன் எதுக்குன்னு கேட்கக்கூடாது, நாங்க போடுறதை தான் சாப்பிடணும் என்று திமிராக பேச, ஓனரை கூப்பிடுங்க என்று சத்தம் போடுகிறான் கார்த்திக். 

இதையடுத்து ஆனந்த் அங்கு வந்து, உனக்கு என்னடா பிரச்சினை என்று கேட்க, சாப்பாடு சரியில்லை என்று சொல்லி, அந்த சாப்பாட்டை அவனை சாப்பிட வைக்கிறான். தொடர்ந்து உடனடியாக காண்ட்ராக்டர மாத்துங்க என்றும் வலியுறுத்துகிறான். 

இதற்கிடையே, ரியா மதுவை சந்தித்து பேச, அதை மீனாட்சியும், மைதிலியும் பார்த்து விடுகின்றனர். அதைத்தொடர்ந்து மதுவுக்கு வலிப்பு வந்து, கீழே விழ, ரியா அவர் யாருன்னு எனக்கு தெரியாது என்று அங்கிருந்து நழுவி வருகிறாள். 

பிறகு மீனாட்சி மற்றும் மைதிலி மதுவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து, உங்களுக்கும் ரியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரிக்க, ரியா பற்றிய உண்மைகளை உடைக்கிறான் மது!

அடுத்ததாக, ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து இந்த சபதத்தில் கார்த்தியை எப்படியாவது தோற்க வைக்கணும்; அவன் தோத்துட்டா உன்னுடைய பிரச்சினை, என்னுடைய பிரச்சனையே எல்லாமே சரியாகிவிடும் என்று பேசிக் கொள்கின்றனர்.

மறுபக்கம் தீபாவும், அபிராமியும் சேர்ந்து கார்த்திக்காக சமைக்கின்றனர். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று நடந்தது என்ன?

 

ஐஸ்வர்யா சைடு கேப்பில் தனியாக வந்து, ரியாவுக்கு போன் போட்டு, ஏதாவது ஐடியா கொடு என்று கேட்க, அவளும் ஒரு ஐடியாவைச் சொன்னாள். அது ஃபெயிலியர் ஆனது. இதையடுத்து வேறு வழியில்லாமல், ஐஸ்வர்யா அபிராமியுடன் கிளம்பி மருத்துவமனை வந்தாள்.

மருத்துவமனையில் டாக்டர் ஐஸ்வர்யாவின் நண்பராக இருக்க, அவள் ஓரளவு நிம்மதி அடைந்தாள். இதனையடுத்து டாக்டர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய, அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வந்தது. 

ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு

இந்த விஷயத்தை அபிராமி மற்றும் அருணிடம் டாக்டர் சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஐஸ்வர்யாவை திட்டி அறைந்தனர். கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வந்தது. 

ஐஸ்வர்யா கர்ப்பம் - டாக்டர் சொன்ன பொய்!

இதையடுத்து, பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி, உண்மையை மறைக்கச் சொல்ல, வேறுவழியில்லாமல் டாக்டர் ஒப்புக்கொண்டாள். பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் தரித்திருப்பதாகவும், குழந்தை நன்றாக இருப்பதாகவும் கூறினாள். 

மற்றவர்களோடு மற்றவர்களாக கார்த்தி!

அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க, கார்த்தியும் அவர்களோடு லைனில் நின்றான். 

மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க, நானும் தொழிலாளிதானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று, சாப்பாடு வாங்கி கார்த்தி சாப்பிட்டான். அவன் சாப்பிடும் போதுதான், சாப்பாடு நன்றாகவே இல்லை என்பது தெரிய வந்தது. 

மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார்த்தி!

இதனையடுத்து, எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல, கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டான். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்