தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கந்த சஷ்டி விரத நாட்களில் தண்ணீர் குடிக்கலாமா.. தூங்கலாமா.. காப்பு கட்டும் நேரம்.. விரதத்தின் பலன்கள் இதோ!

கந்த சஷ்டி விரத நாட்களில் தண்ணீர் குடிக்கலாமா.. தூங்கலாமா.. காப்பு கட்டும் நேரம்.. விரதத்தின் பலன்கள் இதோ!

Nov 06, 2024, 07:52 PM IST

google News
பொதுவாக நீங்கள் எந்த தெய்வத்திற்காக விரதம் இருப்பதோ, அல்லது வழிபாடு செய்யவோ தொடங்கும் முன் உங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை வணங்க வேண்டும். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தை துவங்கும் முன் உங்கள் குல தெய்வத்தை வணங்க வேண்டும். பின்னர் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.

முருகன் வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கந்த சஷ்டி விரதம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தை வேண்டி பெரும்பாலானோர் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர். வேலை வாய்ப்பு, வாழ்வின் முன்னேற்றம், திருமண தடங்கல் நீங்க என அவர் அவருக்கு வேண்டிய வரம் கேட்டு கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது முருகன் வேண்டிய அருள் தருவார் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் வரும் நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை போரில் வெற்றி பெற்றதையே கந்த சஷ்டியாக கொண்டாடுகிறோம். இந்நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. எனவே, கந்த சஷ்டி திருவிழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சிரமங்களை அனுபவிக்க போகும் மூன்று ராசிகள்.. கேதுவின் விளைவு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த போகுகிறது!

Nov 15, 2024 06:58 AM

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ராசியினரே சனி பகவான் குறி வச்சுட்டார்.. யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்!

Nov 14, 2024 07:32 PM

கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்நாட்களில் முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் சாப்பிட்டு ஆறாம் நாளன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். அதே சமயம் அவர் அவர் உடல் நிலைக்கு ஏற்ப விரதத்தை எடுத்துக்கொள்ளவதை தீர்மானிப்பது நல்லது.

இந்நாட்களில் கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவொண்பா போன்ற நூல்களில் ஏதாவது ஒன்றைபாடுவது அவசியம் படிக்க வேண்டும். மேற்சொன்னபடி விரதத்தை கடைபிடித்தால் முருகப் பெருமானின் அருளால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் திருச்செந்தூர் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடலோரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா துவங்கியுள்ள நிலையில், பச்சை நிறம் ஆடை அணிந்து அங்க பிரதட்சனம் செய்து பக்தர்கள் விரதத்தை துவங்கலாம். சிலர் வீட்டிலேயே விரதம் இருந்தும் விரதத்தை கடைபிடிப்பார்கள். அவர்களுக்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

தண்ணீர் குடிக்கலாமா.. தூங்கலாமா

கந்த சஷ்டி விரத நாட்களில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போல் விரதம் இருக்கும் போது பகலில் தூங்க கூடாது. இரவு நேரத்தில் தூங்குவதில் தவறு இல்லை.

காப்பு கட்ட வேண்டிய நேரம்

காப்பு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், பூஜையை துவங்க நினைப்பவர்கள் சனிக்கிழமை காலை 6 மணிக்குள் தொடங்கலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே வீட்டின் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே சாமி படத்திற்கு முன்போ காப்பு கட்டி கொள்ளலாம்.

வீட்டின் பூஜை அறையில் மணப்பலகையில் சிவப்பு துணி விரித்து அதன் மேல் முருகன், வள்ளி தெய்வயானையுடன் இருக்கும் படத்தை வைத்து கொள்ள வேண்டும். கலசம் வைக்க விருப்பம் இருப்பவர்கள் வைத்துக்கொள்ளாலாம். மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

குல தெய்வம் வழிபாடு

பொதுவாக நீங்கள் எந்த தெய்வத்திற்காக விரதம் இருப்பதோ, அல்லது வழிபாடு செய்யவோ தொடங்கும் முன் உங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை வணங்க வேண்டும். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தை துவங்கும் முன் உங்கள் குல தெய்வத்தை வணங்க வேண்டும். பின்னர் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.

நெய்வேத்தியம்

பொதுவாக நெய்வேத்தியம் செய்யும் போது மிகவும் எளிமையாக இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு , காய்ச்சிய பால், தேன் கலந்து வைத்து கொள்ளலாம். மற்ற படி கந்த சஷ்டி விரதத்தில் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நெய்வேத்தியம் செய்வது சிறப்பானது.

முதல் நாளில் கோதுமையில் செய்த ஏதேனும் ஒரு இனிப்பு நெய்வேத்தியம் செய்யலாம். கோதுமையால் செய்த பாயாசம் கோதுமையால் செய்த புட்டு என ஏதோ ஒரு நெய்வேத்தியம் வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் காலையில் வைத்த அதே நெய்வேத்தியத்தை மாலையில் வைக்க கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை