கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!

கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!

Suguna Devi P HT Tamil
Oct 25, 2024 09:50 PM IST

ஒவ்வொரு மாதமும் இரண்டு சஷ்டிகள் வருகிறது. அந்த இரண்டு சஷ்டியிலும் விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கி நன்மை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும்.

கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!
கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!

கந்த சஷ்டி விரத வரலாறு

சூரபத்மன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகன். இவர் 6 தீப்பொறிகளாக தோன்றினார். மேலும் முருகனை வளர்க்க கார்த்திகை பெண்கள் உருவாக்கப்பட்டனர். ஆறு உருவங்களையும் ஒன்றாக்கி ஆறுமுகம் என பெயர் சூட்டப்பட்டார். பிறகு திருச்செந்தூரில் சூரபத்மனை அளிக்க செல்வதற்கு முன் பஞ்சலிங்கத்தை வழிபட்டு சென்றார். தோல்வியை ஏற்காத சூர பத்மன் மரமாக மாறினான்.

பிறகு முருக பெருமான் தனது வேலால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து ஒருபுறம் சேவலாகவும் மற்றொரு புறம் மயிலாகவும் மாற்றி அவரின் கருணையால் தனது வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். இதனால் தேவர்கள் துயரம் நீங்கியது இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திரன் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பி இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த போர் நடந்த காலகட்டத்தை நினைவு கூறும் வகையில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானின் கோவில்களில் சூரசம்காரமும் நடைபெறுகிறது. 

விரத மற்றும் வழிபாடு 

கந்த சஷ்டியின் போது 7 நாட்களும் விரதம் இருக்கலாம். ஒரு சிலரால் நீண்ட நாட்கள் விரதம் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக குழந்தை வரும் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஏழு நாட்களும் ஒரு வரம். இந்த விரதத்தை நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி. 

உடலில் பிணி தீர வேண்டும் என்றாலும், நல்ல வேலை கிடைக்க வேண்டு என்றாலும், இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அணைத்தும் அறுபடை வீடு கொண்ட முருகன் தீர்த்து நல் வரம் அளிப்பார். இந்த விரதத்தை காப்புக் கட்டி கலசம் நிறுத்தி வழிபாட்டை மேற்கொள்வார்கள். சில பேர் காப்பு கட்டாமல் வெறும் விரதம் மட்டும் இருப்பார்கள். நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 6:00 மணிக்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி கலசம் நிறுத்தி காப்பு கட்டி விரதத்தை துவங்கி விட வேண்டும். சிலர் முழு பட்டினியாக இருப்பார்கள். சிலர் பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள். கார்த்திகை மாதம் என்பதால் கடலை உருண்டை சாப்பிடலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்