Punarpoosam Nakshatram: ’ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்!’ புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பலன்கள்!
May 21, 2024, 10:33 PM IST
“Punarpoosam Nakshatram: ஸ்ரீ ராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியிலும், கடைசி பாதம் கடகம் ராசியிலும் உள்ளது. இதனால் இந்த நட்சத்திரத்தை காலற்ற நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்”
புனர்பூசம் நட்சத்திரம் என்பது குரு பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியிலும், கடைசி பாதம் கடகம் ராசியிலும் உள்ளது. இதனால் இந்த நட்சத்திரத்தை காலற்ற நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் குணநலன்கள்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிய குணநலன்களை பெற்று இருப்பார்கள். மென்மையான போக்கை கொண்ட இவர்களுக்கு கொள்கை பிடிப்பு எப்போதும் இருக்கும்.
ராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோபலமும், புத்திக்கூர்மையும் அதிகமாக இருக்கும். ஸ்ரீராம பிரான் புனர்பூசம் நட்சத்திரத்தில்தான் அவதரித்தார் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
மறைத்து பேசுவதில் வல்லவர்கள்
இவர்கள் பேச்சில் துல்லியம் காணப்படும், சில விசயங்களை தெளிவாக மறைத்து பேசுவதில் வல்லவர்களான இவர்கள் சிக்கனத்தை கையாள்வார்கள்.
பணத்தை விட பண்பை அதிகம் நேசிக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் கவலைகளை வெளியில்காட்டாத இயல்பு இவர்களுக்கு இருக்கும். நடப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள்
புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திக்கூர்மை மற்றும் அறிவுடன் சேர்ந்து வீரம் அதிகமாக இருக்கும்.
புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் நிதானத்தை கடைப்பிடித்தாலும், தனக்கென தனிக் கொள்கையை வைத்திருப்பார்கள்.
புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் திகழ்வார்கள்.
புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை
தேவகணத்தை சேர்ந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் விலங்காக பூனையும், விருட்சமாக மூங்கில் மரமும், பறவையாக அன்னப்பறவையும் உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக அதிதி உள்ளது.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழைய வாணியம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்ய அனுகூலங்கள் கிடைக்கும். இருப்பினும் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயத்தில் வழிபாடு செய்வது நன்மைகளை பெற்றுத்தரும்.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலம் தரும் தசைகள்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக குரு மகா தசை வருகிறது. இவர்களுக்கு யோகம் தரும் தசைகளாக சனி மகா தசை, கேது தசை, சூரிய தசை, செவ்வாய் தசை, ராகு தசைகள் உள்ளது. புனர்பூசம் நட்சத்திரத்தின் வசிய நட்சத்திரமாக ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது.
வெற்றிகள் தரும் நட்சத்திர நாட்கள்
மேலும், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் கிட்டும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.