’ஸ்ரீ ராமர் பிறந்த நட்சத்திரம்!’ புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பலன்கள்!

By Kathiravan V
May 21, 2024

Hindustan Times
Tamil

புனர்பூசம் நட்சத்திரம் என்பது குரு பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளது. 

கடைசி பாதம் கடகம் ராசியில் உள்ளதால் இது காலற்ற நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்இனிய குணநலன்களை பெற்று இருப்பார்கள். மென்மையான போக்கை கொண்ட இவர்களுக்கு கொள்கை பிடிப்பு இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோபலமும், புத்திக்கூர்மையும் அதிகமாக இருக்கும். ஸ்ரீராம பிரான் புனர்பூசம் நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.

இவர்கள் பேச்சில் துல்லியம் காணப்படும், சில விசயங்களை தெளிவாக மறைத்து பேசுவதில் வல்லவர்களான இவர்கள் சிக்கனத்தை கையாள்வார்கள். 

பணத்தை விட பண்பை அதிகம் நேசிக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் கவலைகளை வெளியில்காட்டாத இயல்பு இவர்களுக்கு இருக்கும். நடப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

முள்ளங்கி தரும் நன்மைகள்