தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chithirai Nakshatram: ‘சக்கரத்தாழ்வார் அவதரித்த நட்சத்திரம்' சித்திரை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Chithirai Nakshatram: ‘சக்கரத்தாழ்வார் அவதரித்த நட்சத்திரம்' சித்திரை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil

May 25, 2024, 04:48 PM IST

google News
"Chithirai Nakshatram: சித்திரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்தவர்கள் அழகியல் சார்ந்த விஷயங்கள் மூலம் வளர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர்"
"Chithirai Nakshatram: சித்திரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்தவர்கள் அழகியல் சார்ந்த விஷயங்கள் மூலம் வளர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர்"

"Chithirai Nakshatram: சித்திரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்தவர்கள் அழகியல் சார்ந்த விஷயங்கள் மூலம் வளர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர்"

செவ்வாய் பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் புதன் பகவானின் ராசியான கன்னி ராசியிலும், கடைசி இரண்டு பாதங்கள் சுக்கிர பகவானின் துலாம் ராசியிலும் வருகிறது. ஒரு நட்சத்திரம் இரண்டு ராசிகளில் விழுவதால் சித்திரை நட்சத்திரம் உடலற்ற நட்சத்திரமாக வகைப்படுத்தப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

சித்திரை நட்சத்திரத்தின் குணநலன்கள் 

சித்திரை முதல் இரண்டு பாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாகவும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்தவர்கள் அழகியல் சார்ந்த விஷயங்கள் மூலம் வளர்ச்சி அடைபவர்களாகவும் உள்ளனர். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வேலை  அல்லது ஏதோ  ஒரு தொழிலை கட்டாயம் மேற்கொள்வார்கள். மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறப்பாக செயல்படும் தன்மை இவர்களுக்கு இருக்கும். 

ஆபரண பிரியர்களான இவர்கள் அதிக நகைகளை அணியும் பழக்கம் கொண்டு இருப்பார்கள். தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்வதில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும்.  

விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும் 

சித்திரை முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வெளி அரங்க விளையாட்டுக்களிலும், மூன்று மற்றும் நான்காம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உள் அரங்க விளையாட்டுக்களிலும் ஆர்வமாக ஈடுபடுவார்கள். 

மென்மையாக பேசினாலும், தங்கள் பேச்சில் பிறர் அடிபணிய வேண்டும் என்று நினைப்பார்கள். பணம் விஷயத்தில் சிக்கனமாக இருக்கும் இவர்களுக்கு ஊர் பிரியம் அதிகம் இருக்கும். 

சித்திரை நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள்:-

சித்திரை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். 

சித்திரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான குணங்களை கொண்டு இருப்பார்கள். 

சித்திரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் இருக்கும். 

சித்திரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். 

சித்திரை நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை 

ராட்சஷ கணம் பொருந்திய சித்திரை நட்சத்திரத்தின் விலங்காக புலி உள்ளது. உரிய விருட்சமாக வில்வமரமும், உரிய பறவையாக மரங்கு பறவையும் உள்ளது. 

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தில் வழிபாடு நடத்தி வர அனுகூலங்கள் கிடைக்கும். அதே வேளையில் சித்திரை நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பெருமாளை வழிபட்டு வர நன்மைகள் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில்தான் சக்கரத்தாழ்வார் மற்றும் விஸ்வகர்மா ஆகியோர் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு முதல் தசையாக செவ்வாய் தசை உள்ளது. 

அனுகூலம் தரும் தசைகள் 

இவர்களுக்கு ராகு தசை; ராகு புத்தி, சனி தசை; சனி புத்தி, கேது தசை; கேது புத்தி, சூரிய தசை; சூரிய புத்தி, சந்திர தசை; சந்திர புத்தி ஆகியவை நன்மைகளை தரும். சித்திரை நட்சத்திரத்திற்கு விசாகம் நட்சத்திரம் வசிய நட்சத்திரமாக உள்ளது. 

வெற்றிகள் தரும் நட்சத்திர நாட்கள் 

சுவாதி, சதயம், திருவாதிரை, அனுசம், உத்திரட்டாதி, பூசம், மூலம், அஸ்வினி, மகம், உத்ராடம், கிருத்திகை, உத்திரம், அஸ்தம், திருவோணம், ரோகிணி ஆகிய நட்சத்திர நாட்களில் சித்திரை நட்சத்திரக்கார்கள் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி