தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ஜூன் சூறாவளி பணமழை.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டக்கார 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Money Luck: ஜூன் சூறாவளி பணமழை.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டக்கார 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 11:48 AM IST

Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்றார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் செவ்வாய் பகவானால் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஜூன் சூறாவளி பணமழை.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டக்கார 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
ஜூன் சூறாவளி பணமழை.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்டக்கார 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல செவ்வாய் பகவான் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார்.

ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்றார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் செவ்வாய் பகவானால் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த பொடியும் இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். துணிச்சலான காரியங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. பணம் உங்களிடம் விளையாடப் போகிறது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் நீங்கள் எதிர் பார்த்தது போல முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மகிழ்ச்சி பெறுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel