தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனிப்பெயர்ச்சியும், சூரிய கிரகணமும்: 6 ராசிகளுக்கு என்ன நடக்கும்?

சனிப்பெயர்ச்சியும், சூரிய கிரகணமும்: 6 ராசிகளுக்கு என்ன நடக்கும்?

Apr 28, 2022, 04:52 PM IST

google News
சூரிய கிரகணமும், சனிப்பெயர்ச்சியும் அடுத்தடுத்து நிகழ உள்ளதால், மேஷ ராசி முதல் கன்னிராசி வரையுள்ள 6 ராசிகளுக்கு, எந்த மாதிரியான விஷயங்கள் நடக்குமென இங்கே காணலாம். மேலும் அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
சூரிய கிரகணமும், சனிப்பெயர்ச்சியும் அடுத்தடுத்து நிகழ உள்ளதால், மேஷ ராசி முதல் கன்னிராசி வரையுள்ள 6 ராசிகளுக்கு, எந்த மாதிரியான விஷயங்கள் நடக்குமென இங்கே காணலாம். மேலும் அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

சூரிய கிரகணமும், சனிப்பெயர்ச்சியும் அடுத்தடுத்து நிகழ உள்ளதால், மேஷ ராசி முதல் கன்னிராசி வரையுள்ள 6 ராசிகளுக்கு, எந்த மாதிரியான விஷயங்கள் நடக்குமென இங்கே காணலாம். மேலும் அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு, சனிபகவான் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று அதிசாரமாகப் பெயர்ச்சி அடைய உள்ளார். மேலும் அதற்கு மறுநாளான ஏப்ரல் 30ஆம் தேதியன்று, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் ஆனது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4.08 மணி வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் ஆனது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

சதயத்தில் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. லாபத்தின் உச்சத்தில் பறக்கப் போவது யார்?

Dec 14, 2024 11:21 AM

கேது.. ஜாக்பாட்டில் நனையும் ராசிகள்.. இனி உங்களை விட்டுட்டு தேட மாட்டார்.. தொடராதீங்க!

Dec 14, 2024 11:14 AM

குரு கொடூர யோகக்காரர்.. பணக்கட்டிலில் தள்ளி விடப் போகும் ராசிகள்.. இனி உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

Dec 14, 2024 09:56 AM

தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. மிரட்டும் சனி.. உச்சத்தில் கொடி பறப்பது உறுதி!

Dec 14, 2024 09:51 AM

எவரையும் காந்தம் போல் கவரும் ராசியில் பிறந்தவரா.. அன்பை அள்ளித் தெளிப்பார்கள்.. உறவுகளை கட்டி ஆளும் ஆற்றல் சாத்தியம்!

Dec 14, 2024 09:02 AM

நிறைய பேரை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இந்த ராசிக்கு இருக்காம்.. இவர்களிடம் காதல் அதிகமாக இருக்குமாம்!

Dec 14, 2024 09:02 AM

நவக்கிரகங்களின் அடிப்படையில் கூற வேண்டுமென்றால், சனியும், சூரியனும் எதிரி கிரகங்களாகும். அதே சமயம் ஒரே ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்துள்ளனர், இந்த கிரகங்களின் கூட்டணியால் எந்தெந்த ராசிகளுக்கு, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

மேஷ ராசி

மேஷ ராசியைப் பொறுத்தவரை, சூரியக் கிரகணத்தை ஒட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சியானது நன்மையைத் தரும். சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வதால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், குழந்தைகளால் நற்செய்தி கிடைக்கும்.

ரிஷப ராசி

இந்த சூரிய கிரகணம் சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்கு வெற்றியைத் தரும், உங்களது ராசியைப் பொறுத்தவரை விரைய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது, எனவே உங்கள் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் தீரும். சனிபகவான் பத்தாவது வீட்டில் அமர்வதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த அதிர்ஷ்டம் கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசியைப் பொறுத்தவரை லாபஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. சனி பகவான் பாகிஸ்தானுக்கு மாறுகிறார், உங்களது நேர்மையான செயலுக்கு உரிய சன்மானம் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை, குறிப்பாகத் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

கடக ராசி

சனி பகவான் கடக ராசியில் அஷ்டம ஸ்தானத்தில் அமர உள்ளார், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது, குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால், சனிப்பெயர்ச்சியால் எந்த பாதிப்பும் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து காரியத்திலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்ம ராசி

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, பாக்கிய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஏழாம் வீடான கடக ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி நிகழ உள்ளதால், எந்த காரியத்திலும் தலையிடாமல் பொறுமையாக இருப்பது நல்லது. வாகன பயணத்தில் கவனம் தேவை, கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைதியாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் புதனை அதிபதியாகக் கொண்டவர்கள், உங்களது ராசியில், சூரியகிரகணம் எட்டாவது வீட்டில் நிகழவுள்ளது. சனிபகவான் பெயர்ச்சி அடைந்து ஆறாவது வீட்டில் அமர உள்ளார், குடும்ப பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும், புதிதாகச் சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் உண்டான பிரச்சனைகள் நீங்கும்.

அடுத்த செய்தி