August Mithunam Rasipalan: ஆகஸ்ட் மாதத்தில் ஆறுதல் கிடைக்குமா? மிதுன ராசிக்கு என்னவெல்லாம் நடக்கப் போகிறது?
Jul 19, 2024, 08:46 AM IST
August Mithunam Rasipalan: சுக்கிரன் கேது உடன் நான்கில் சேரும், சனி மட்டும் 9ல் இருக்கும். இது எப்படி என்று பார்த்தால், எல்லாமே நன்றாக இருக்கும், ஆனால் சுமாராக இருக்கும். எந்த பாதகமும் இல்லை என்றாலும், அதற்காக சாதகம் கொட்டிக் கிடக்கிறது என்று அர்த்தமில்லை.
ஆகஸ்ட் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாள், வாரம் என்கிற வகையில் மாதாந்திர ராசி பலனும் இன்று கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் என்பதை காணலாம். மிதுனம் ராசிக்கான பலன்களை இப்போது காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
மிதுன ராசிக்கு எப்படி இருக்கு?
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு மாற்றம் வராதா என்று காத்திருக்கும் ராசிகளில் மிதுனம் ராசியும் ஒன்றும். அப்படிப்பட்ட மிதுனம் ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்களை இப்போது காணலாம். ஆகஸ்ட் மாதத்தில் குருவும் செவ்வாயும் 12ம் இடத்தில் இருப்பார்கள். புதன்-சுக்கிரன் 3ம் இடத்தில் இருக்கும், புதன் வக்கிரம் அடையும், சூரியன் இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு மாறுதல் அடையும்.
சுக்கிரன் கேது உடன் நான்கில் சேரும், சனி மட்டும் 9ல் இருக்கும். இது எப்படி என்று பார்த்தால், எல்லாமே நன்றாக இருக்கும், ஆனால் சுமாராக இருக்கும். எந்த பாதகமும் இல்லை என்றாலும், அதற்காக சாதகம் கொட்டிக் கிடக்கிறது என்று அர்த்தமில்லை. எல்லாம் இருந்தாலும், எதுவுமே இல்லாததைப் போன்ற சூழலை நிலவும். சனி 9ல் வக்கிரம் அடைவதால் அப்படி தான் இருக்கும்.
தொழில் லாப ஸ்தானம் எப்படி?
குரு 12ல் இருப்பதால் தொழிலில் நிதானமாக முடிவுகள் எடுக்க வேண்டிய காலகட்டம். தற்செயலாக நடப்பவற்றை வேடிக்கை பாருங்கள். நானாக ஏதாவது செய்கிறேன் என்று ஏதாவது செய்ய நினைத்தால், தாமதம் தான் பரிசாக கிடைக்கும். அதை பார்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் சின்ன சின்ன ஏற்ற, இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். அதை ஆகஸ்ட் வரை அப்படியே விட்டுவிடவும்.
குடும்பத்தில் அமைதி நிலவுமா?
வருமானம் வரும், பின்னாலேயே செலவு வந்து கொண்டிருக்கும். எங்கே எப்படி செலவு வரும் என தெரியாது. குடும்பத்தார், ஏதாவது ஒரு வகையில் வம்பிழுத்துக் கொண்டிருப்பார்கள். பிரச்னை எங்கிருந்து வரும், யார் வழியில் வரும் என்கிற சூழல் இருக்கலாம். புரிதல் காரணமாக பல பிரச்னைகள் வரலாம். எனவே புரிதல் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.
திருமண தடை நீங்குமா?
திருமண பொருத்தம் தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நினைத்தது நடக்குமா என்றால் கஷ்டம் தான். குரு 12 ல் இருக்கிறார், எந்த இடத்திலும் தடை இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டத்தை தரும் கோள்கள் அனைத்துமே மறைந்துவிட்டன. உதவும் இடத்தில் எந்த கோள்களும் இல்லை. எனவே இந்த மாதத்தில் எதுவுமே வேகமாக இருக்காது. போன மாதம் பொறுமையாக இருந்தீங்களா? இந்த மாதமும் அதே நிலை தான்!
மாணவர்களுக்கு மன திருப்தி
மாணவர்கள், கல்வி சார்ந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 12ல் குரு இருப்பதால், பயிற்சி வகுப்புகள் பெரிய பலன் தருவார்கள். புதன்-சுக்கிரன் சேர்ந்து இருப்பதாலும், புதன் வக்கிரமடைந்திருப்பதாலும் இதுவரை இல்லாத குடும்ப வழி ஒத்துழைப்புகள் கிடைத்து, நினைத்த கல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கல்வி நன்றாக போனால் பிரச்னை இல்லை. தனியாக சிறப்பு தேர்வுகளுக்கு தயாராகிறீர்கள் என்றால், அதை குறி வைத்து அடிக்கலாம். பயிற்சிகள், உங்களுக்கு பெரிய பலன் தரும்.
பெண்களே உஷார்
பெண்களை பொருத்தவரை, குடும்பத்தால் சிறிய சிறிய பிரச்னைகள் வரும். காரணம் செவ்வாய் இருப்பது 2ம் இடத்தில். உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். யாருக்கு பதில் சொல்வது என்கிற நெருக்கடி நிலை வரலாம். நாலாபுறமும் கேள்விகள் எழும். அமைதி தான் உங்களுக்கான மருந்து. சரியானதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்த மாதம் ரொம்ப சுமாராக தான் போகும். பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்