Airtel Scholarship: ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம்!4 ஆயிரம் மாணவர்கள் கல்விக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Airtel Scholarship: ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம்!4 ஆயிரம் மாணவர்கள் கல்விக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

Airtel Scholarship: ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம்!4 ஆயிரம் மாணவர்கள் கல்விக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 19, 2024 07:59 PM IST

பாரதி ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை 4 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. பாரதி ஏர்டெல் அறக்கட்டளையின் 25வது ஆண்டு நிறைவை நினைவுபடுத்தும் விதமாக இத்திட்டத்தின் முதல் பேட்ச்சில் 250 மாணவர்கள் பலன் அடைவார்கள்.

ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் 4 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை
ஏர்டெல் மாணவர் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் 4 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை

ஏர்டெல் ஸ்காலர்ஷிப் திட்டம்

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளை (5 ஆண்டுகள் வரை) கொண்டிருக்கும், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) உள்ள டாப் 50 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஐடி மெட்ராஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சண்முகா ஆர்ட்ஸ் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் ரிசர்ச் அகாடமி, கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு உதவித்தொகை

ஆகஸ்ட் 2024இல் சேர்க்கைக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் 250 மாணவர்களுடன் தொடங்கும் இந்த திட்டம் படிப்படியாக அடுத்தடுத்து ஆண்டுகளில் விரிவாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவு செய்யப்படுவதுடன், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் ஸ்காலர்ஷிப்பால் பயனடைவார்கள்.

இந்த உதவித்தொகையில் முழுமையாக நிதியுதவி அளிக்கப்படும். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த தகுதியுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8.5 லட்சத்துக்கும் மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் 50 முன்னணி என்ஐஆர்எஃப் பொறியியல் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, மெஷின் லேர்னிங், ரோபோடிக்ஸ்) ஆகிய துறைகளில் UG மற்றும் ஒருங்கிணைந்த துறைகளில் சேர்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாரதி ஸ்காலர்கள்

இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் ‘பாரதி ஸ்காலர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். படிப்புக் காலம் முழுவதும் அவர்கள் தங்கள் கல்லூரிக் கட்டணத்தில் 100% தொகையைப் பெறுவார்கள் மற்றும் மடிக்கணினியும் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணமும் வழங்கப்படும். தரமான உயர் கல்விக்கான அணுகலைச் செயல்படுத்துவதன் மூலமும், தாங்கள் பெறும் நன்மைகள் நிரந்தரமாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தோடும் பாரதி ஸ்காலர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தவுடன் தாமாகவே முன்வந்து குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு இதேபோல் பொருளாதார ரீதியிலான ஆதரவை தருவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.

மாற்றத்துக்கான இந்த நீடித்த முயற்சி பலரது வாழ்க்கைகளை வடிவமைக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்குபெறவும் இது உதவும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கனவுகளை தொடர்வதற்கான முயற்சி

இந்த திட்டம் குறித்து பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பாரதி ஏர்டெல் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான ராகேஷ் பாரதி மிட்டல் கூறியதாவது, "கடந்த 25 ஆண்டுகளில் பாரதி ஏர்டெல் அறக்கட்டளை கல்வி முயற்சிகள் மூலம் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்மை செய்துள்ளது.

பாரதி ஏர்டெல் மாணவர் உதவித்தொகை திட்டத்தின் மூலம் பல்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் அவர்கள் தங்கள் கனவுகளைத் தொடருவதற்கும் உதவிசெய்யும் எங்கள் உறுதிப்பாட்டை விரிவுபடுத்துகிறோம்.

சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு கல்வியே அடிப்படை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு சமூக அடுக்குகளில் உள்ள மாணவர்களுக்கு முன்மாதிரியான கற்றல் மற்றும் அணுகக்கூடிய கல்வியை எப்போதும் வழங்கி வருகின்றன.

நாளைய தொழில்நுட்ப உலகின் மாறிவரும் பரிணாமத்தைக் கையாளும் திறன் கொண்ட தொழில் வல்லுநர்களை வளர்ப்பதற்கு இந்திய கல்வித்துறையில் இந்தக் கோட்பாடுகளை வலுப்படுத்த நாங்கள் முயற்சிசெய்து வருகிறோம்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?  

ஏர்டெல்லின் இந்த ஸ்காலர்ஷிப் பெற ஆர்வமுள்ள மாணவர்கள் https://bhartifoundation.org/bharti-airtel-scholarship/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மின்னஞ்சல்/ மொபைல் எண் பயன்படுத்தி பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, விவரங்களை நிரப்பி ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்று, நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான கடிதம், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வருமான வரிச் சான்றிதழ், கல்லூரி கல்வி மற்றும் விடுதி கட்டண விவரங்கள், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள், கல்லூரியின் வங்கி கணக்கு விவரங்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.