August Release: மழை பிடிக்காத மனிதன் முதல் அந்தகன் வரை.. ஆகஸ்ட் முதல் வார ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்
August Release: ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸாகும் தமிழ் படங்களின் பட்டியல் தொடர்பாக பார்க்கலாம்.

மழை பிடிக்காத மனிதன்
'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடித்து உள்ளார். அது மட்டுமில்லாமல் படத்தில் சத்யராஜ் , மேகா ஆகாஷ் , பிரியா பவானி சங்கர், முரளி சர்மா, தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் , சரத்குமார் ஆகியோர் நடித்து உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாக உள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அந்தகன்
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான படம் அந்தகன். கடந்த ஆண்டில் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த போதிலும் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்த படம் அந்தகன. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் உலா வந்தன. ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Boat
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள Boat படம், ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் வெளியீட்டு ப்ரோமோவை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.