தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck Rasi: ’சனி பகவானின் வக்ர நிலை!' அக்டோபர் மாதம் வரை அள்ள அள்ள பணத்தை எடுக்க போகும் 3 ராசிகள்!

Money Luck Rasi: ’சனி பகவானின் வக்ர நிலை!' அக்டோபர் மாதம் வரை அள்ள அள்ள பணத்தை எடுக்க போகும் 3 ராசிகள்!

Kathiravan V HT Tamil

Aug 21, 2024, 01:47 PM IST

google News
ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார்.
ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார்.

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.  சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. 

சமீபத்திய புகைப்படம்

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள்.. இந்த நான்கு ராசிக்கு ராகு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்!

Nov 28, 2024 11:57 AM

ஒரே இடத்தில் சந்திரன் - கேது.. இந்த ராசிகள் எச்சரிக்கையா இருங்க.. இந்த பிரச்சனை வர வாய்ப்பு.. ஆன இவர்களுக்கு யோகம்!

Nov 28, 2024 11:43 AM

சுக்கிரனின் தாக்கம்.. இந்த ராசிக்கு விரைவில் டும்டும்.. எல்லாம் கைகூடும் நேரம் வரப்போகுது.. வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்!

Nov 28, 2024 11:18 AM

குரு.. சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.. ஞானத்தை பெறுகின்ற ராசிகள்.. வாழ்க்கை மாறப்போகுது!

Nov 28, 2024 09:52 AM

சனி பந்தி போட்டு வெளுக்கப் போகிறார்.. பிரித்து மேயப் போகும் ராசிகள்.. பணத்தில் மூச்சு முட்ட போகுது

Nov 28, 2024 09:48 AM

சனி பகவானின் பண்புகள் 

பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். கால புருஷனான 10 ஆவது வீடு எனும் தொழில் ஸ்தானமும், 11ஆவது வீடான லாப ஸ்தானமும் இவரது ஆட்சி வீடாக உள்ளது. கால புருஷனின் 7ஆம் வீடு எனும் சமுதாய ஸ்தானம் இவருக்கு உச்ச வீடு ஆகும்.

சனி வக்ர பெயர்சி 

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனிபகவான் உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறார். 

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பம் ராசியில் வக்ரம் பெற்று உள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி கும்பம் ராசியிலேயே வக்ரம் பெற்ற நிலையில் சனி பகவான் உள்ளார். வக்ர சனி தொடங்கி உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். இதன் மூலம் பலன் அடையும் ராசிகளை தற்போது பார்க்கலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலை மிகவும் சாதகமாக உள்ளது. சனியின் அருளால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய வருமானம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. சனியின் தாக்கத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு ஏற்ற வெகுமதிகள் கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். கல்விப் பணியில் மரியாதை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் புலப்படும். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெறலாம். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி