Guru Thisai Palangal: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 ஆண்டுகால குரு திசை காலத்தில் கொடிகட்டி பறக்கும் யோகம் லக்னம் எது?
Guru Thisai Palangal: குரு பகவானின் தசை ஒருவருக்கு 16 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த குரு தசை ஆனது ஒருவருக்கு குழந்தை பருவத்தில் வந்தால் நல்ல படிப்பு ஏற்படும். மத்திம வயதில் வந்தால் நல்ல தொழில் அமையும். வயோதிகத்தில் வந்தால் சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.
நவகிரகங்களில் முதன்மை முழு சுப கிரகம் ஆன குரு பகவான் ஆவார். குரு பகவான் அனைத்து அறிவின் மூலமாகவும் கருதப்படுகிறார். அவர் மூலமாகவே நாம் உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறோம். ஞானம் என்பது அறிவின் உச்ச நிலை. குரு பகவான் ஞானத்தின் உண்மையான அடையாளமாகக் கருதப்படுகிறார். குரு பகவானின் அருளால் வாழ்க்கை வளம் பெறும்.
ஒரு ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் கெடாமல் இருப்பது அவசியம். குருவும், சுக்கிரனும் கெட்டாலே வாழ்கையின் சுகங்கள் கிடைக்காது. இந்த இரண்டு கிரகங்கள்தான் வாழ்கைக்கு தேவைப்படும் வசதி, வாய்ப்பு, பொருளாதாரம், முன்னேற்றம், மேன்மைகள், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை தருகின்றன.
குரு திசை தரும் பலன்கள்!
ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் கெட்டால், செல்வம், குழந்தை பாக்கியம் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.
குரு பகவானின் திசை ஒருவருக்கு 16 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த குரு திசை ஆனது ஒருவருக்கு குழந்தை பருவத்தில் வந்தால் நல்ல படிப்பு ஏற்படும். மத்திம வயதில் வந்தால் நல்ல தொழில் அமையும். வயோதிகத்தில் வந்தால் சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.
எந்த லக்னங்களுக்கு என்னென்ன பலன்!
குரு பகவான் 12 லக்னக்காரர்களுக்கும் சிறப்பு செய்வது இல்லை. நட்பு லக்னங்களான மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு நன்மைகளை செய்வார்.
சுக்கிரன் தலைமையிலான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய பொருள் அணி லக்னங்களுக்கு குரு திசை அந்த அளவுக்கு சிறப்புகளை தருவது இல்லை.
ஆனாலும், குரு பகவான் ஒரு இயற்கை சுபர் என்பதால் மோசமான பலன்களை தருவதும் இல்லை. ஆகாத லக்னங்களுக்கு 3, 6, 10, 11 ஆகிய உபஜெய ஸ்தானங்களில் இருக்கும் போதும் சுபர் ஆகவே செயல்படுவார்.
குரு தனித்து நிற்பது பலன்களை தராது
குரு அணி லக்னங்களுக்கு தனித்து குரு வலுப்பெற்று நிற்பது சிறப்புகளை தராது. உதாரனமாக மீன லக்னத்தில் குரு 10ஆம் இடத்தில் ஆட்சி பெற்று தனித்து இருந்தால் நன்மைகளை செய்யாது.
தனது அணியை சேர்ந்த மேஷ லக்னத்தில் 12ஆம் இடத்தில் குரு பகவான் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் தேவையற்ற விரையங்களை கொடுப்பார். மேஷம் மற்றும் விருச்சிக லக்னங்களுக்கு குரு திசை நல்ல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.