சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவான் காதுகளில் நீங்கள் ரகசியமாக சொல்லும் விசயங்கள் வெற்றி பெறுகிறதா?
Nov 07, 2024, 02:11 PM IST
தர்மத்தை மீறி செயல்படுபவர்களை தண்டிக்கும் காவலராக நந்தி தேவர் பார்க்கபடுகிறார். நந்தி தேவருக்கு, ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் என பல பெயர்கள் உண்டு.
பொதுவாக நாம் சிவன் கோயில் செல்லும் போது மூலவரை பார்க்கும் முன் நந்தியை பார்க்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும். நம் புராணங்களில் நந்தி சிவ பெருமானின் வாகனம் என்று குறிப்பிடுகிறது.
சமீபத்திய புகைப்படம்
பொதுவாக நாம் கோயிலுக்கு செல்லும் போது சிறு வயது முதல் நந்தியின் காதில் நம் வேண்டுதல்களை சொன்னால் அது நடக்கும் என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். காலப்போக்கில் நாமும் கோயிலுக்கு செல்லும் போது எல்லாம் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை சொல்லி இருப்போம். ஆனால் நந்தியை தொட்டு வணங்கலாமா அதன் காதில் நம் வேண்டுதல்களை சொல்வது சரியா என்பதை இங்கு பார்க்கலாம்.
நாம் எப்போதும் சிவன் கோயில் செல்லும் போது நந்தியை தொடாமல் வணங்க வேண்டும். பொதுவாகவே நாம் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொட்டு வணங்குவதை தவிர்க்க வேண்டும். வேதத்தில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக் கூடாது.
நந்தி தேவர் சிறப்பு
நந்தி என்பது ஞானத்தின் அடையாளம் மட்டுமல்ல. தர்மத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. தர்மத்தின் வழி நின்று இறைவனை வணங்க வேண்டும் என்ற தத்துவமே நந்தி வழிபாட்டில் தாத்பரியம். தர்மத்தை மீறி செயல்படுபவர்களை தண்டிக்கும் காவலராக நந்தி தேவர் பார்க்கபடுகிறார். நந்தி தேவருக்கு, ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் என பல பெயர்கள் உண்டு.
தரிசனம் செய்யும் முறை
சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நாம் நந்திக்குப் பின்னால் நின்று நந்திகளின் கொம்புகள் வழியாக இறைவனை தரிசிப்பதே மிகவும் சரியான முறை. பின்னர் நாம் நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானை வணங்க வேண்டும். அதே சமயம் நாம் எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும் நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் நிற்க கூடாது. நாம் அப்படி செய்யாமல் இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொல்லை செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. நாம் நமது வேண்டுதல்களை நேரடியான இறைவனிடம் முன் வைக்கலாம்.
பிரதோஷ நந்தி பூஜை
பொதுவாக பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசினில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படும். அதனால் தான் நாம் அந்த நேரத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபடுகிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்று நம்பப்படுகிறது. இதனால் தான் பிரதோச நேரத்தில் நந்திக்கு செய்யும் பூஜை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் நாம் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது மிகவும் தவறு. எதிர்மறையான பலன்களைத் தரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்