Kanchi varadaraja perumal temple:காஞ்சி வரதராஜ பொருமாள் கோயிலில் சிறப்பு ஆராதனை
பொருமாள் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அத்திவரதர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பிரசித்த பெற்ற கோயிலாக இருப்பதோடு தமிழகத்தின் பிறபகுதிகள் மற்றும் பிற மாநிலத்தில் இருப்பவர்களும் அதிகமாக வருகை புரியும் கோயிலாக இருந்து வருகிறது.
இதையடுத்து புரட்டாசி மாசம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலிலும் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.
சுவாமிக்கு சாமந்தி பூ, ரோஜா பூ, தாமரைப்பூ, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக காட்சி அளித்தார். புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் மற்றும் வெளியூர்,வெளிமாநிலம் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்திருந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை புரிந்து நீண்ட கியூ வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி பூதேவி பிறந்த தேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு பக்தியுடன் வணங்கி வழிபட்டனர்.