தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நந்திக்கு பிரதிஷ்டை.. தானாக பால் சொரிந்த பசு.. கால்நடைகளை காப்பாற்றும் மாதேஸ்வரர்

HT Yatra: நந்திக்கு பிரதிஷ்டை.. தானாக பால் சொரிந்த பசு.. கால்நடைகளை காப்பாற்றும் மாதேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 16, 2024 06:45 AM IST

வரலாறுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வரும் எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் குட்டையூரில் அமைந்துள்ள அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்.

அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்

குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி நடந்த காலத்தில் இருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு கோயில்கள் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக எத்தனையோ சிவன் கோயில்கள் இருந்தாலும் தஞ்சாவூரில் அமைந்திருக்கக்கூடிய அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை சரித்திரத்தின் குறியீடாக திகழ்ந்த வருகின்றது.

தமிழ்நாட்டில் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து சிவபெருமானுக்கு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் கட்டிய எத்தனையோ கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.

இதுபோல வரலாறுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வரும் எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் குட்டையூரில் அமைந்துள்ள அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயில்.

தலத்தின் சிறப்பு

 

இந்த கோயிலில் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக இங்கு அமர்ந்திருக்கக் கூடிய இருக்கக்கூடிய நந்தியம் பெருமானை பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது இது இந்த கோயிலின் தனி சிறப்பாகும்.

குழந்தை பாக்கியம் வேண்டி இருக்கக்கூடியவர்கள். இந்த கோயிலில் சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு குழந்தை வரம் கொடுத்தால் நான் உங்களுக்கு வேண்டுதல் செய்கிறேன் என நந்தி பெருமானை அனைவரும் வேண்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சிவபெருமானை பசு அடையாளம் காட்டியதன் காரணமாக இந்த ஊரில் கால்நடைகளுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இந்த தளத்திற்கு அழைத்து வந்து சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு தீர்த்தத்தை பக்தர்கள் கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். மேலும் விரைவில் கால்நடைகள் குணமாகி விடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

குழந்தை வரம் வேண்டிக்கொண்டவர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறிய பிறகு நந்தி சிலை வாங்கி கொடுத்து தங்களது நேற்று கடனை செலுத்தி வருகின்றனர்.

தல வரலாறு

 

இந்த பகுதியில் மெய்ச்சலுக்காக வந்த காராம் பசு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் நின்று தானாக பாலை சுரந்துள்ளது. பசுவின் மடியில் இருந்து பால் குறைவதை கண்டு மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒரு நாள் அந்த பசுவை அதன் பாதுகாவலர் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார்.

தானாக ஒரு இடத்தில் நின்று பசு பாலை சுரந்துள்ளது. அங்கு சென்று பார்த்த பாதுகாவலருக்கு மிகப்பெரிய ஆச்சரியம். பசு தானாக பால் சொறிந்த இடத்தில் அழகிய சிவலிங்கத் திருமேனி இருந்துள்ளது. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதற்குப் பிறகு அங்கே கோயில் எழுப்பப்பட்டு மக்கள் அனைவரும் வழிபாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

அமைவிடம்

 

இந்த கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் குட்டையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel