தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: ஒரே கல்.. 190 டன் எடை.. ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர்

HT Yatra: ஒரே கல்.. 190 டன் எடை.. ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர்

Mar 16, 2024, 06:00 AM IST

google News
Mundhi Vinayagar Temple: தமிழ் புத்தாண்டு தினத்தன்று இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு 5 டன் எடை கொண்ட காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்படுவது மிகப்பெரிய சிறப்பாகும். நவராத்திரி திருநாளில் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும்.
Mundhi Vinayagar Temple: தமிழ் புத்தாண்டு தினத்தன்று இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு 5 டன் எடை கொண்ட காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்படுவது மிகப்பெரிய சிறப்பாகும். நவராத்திரி திருநாளில் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும்.

Mundhi Vinayagar Temple: தமிழ் புத்தாண்டு தினத்தன்று இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு 5 டன் எடை கொண்ட காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்படுவது மிகப்பெரிய சிறப்பாகும். நவராத்திரி திருநாளில் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும்.

எந்த செயலை தொடங்கினாலும் முதலில் வணங்க வேண்டிய கடவுளாக விநாயக பெருமான் விளங்கி வருகிறார். ஆதி கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானின் மூத்த மகன் ஆக விநாயக பெருமான் திகழ்ந்து வருகிறார். பார்வதி தேவியின் ஆசை மகனாக விளங்கும் விநாயக பெருமான் எந்த கோயில்களிலும் முதல்வனாக வீற்றிருக்கின்றார்.

சமீபத்திய புகைப்படம்

சனி வெறி பிடித்துவிட்டார்.. விரட்டி விரட்டி கொட்டுவார்.. இந்த ராசிகள் மீது இனி டச் பண்ண முடியாது!

Nov 27, 2024 10:59 AM

கயிறு கட்டி இழுக்கும் செவ்வாய்.. ரெடியா இருங்க.. இந்த ராசிகள் உச்சம் செல்வது உறுதி.. பணம் செய்யும் வேலை!

Nov 27, 2024 09:57 AM

சனி மோசமான ஆளுப்பா.. இனி பணத்தில் பறக்கும் ராசிகள் நீங்கதான்.. உச்சத்தில் கொடி பறக்கும்!

Nov 27, 2024 09:54 AM

கேது பகவானால் கடக ராசிக்கு அதிஷ்டம்.. நல்ல முன்னேற்றம் இருக்கும்.. ஆனால் இதில் கவனம் தேவை!

Nov 27, 2024 09:41 AM

ராகு பகவான் பெயர்ச்சி.. கன்னி ராசிக்கு அடிக்க போகுது லக்.. எல்லாம் நன்மைகளும் வந்து சேரும்!

Nov 27, 2024 08:52 AM

குரு.. வளமான வாழ்க்கை வாழப் போகும் ராசிகள்.. தொட்டால் தங்கம் மலரும்.. பண யோகம்.. தன யோகம்!

Nov 27, 2024 07:00 AM

விநாயகர் பெருமானை வணங்கி விட்டு அடுத்த செயலை செய்ய வேண்டும் என்பதற்காகவே அமைத்துக் கோயில்களிலும் முதன்மை நாயகனாக வீற்றிருக்கிறார் விநாயகர். தனக்கென மற்ற கடவுள்கள் தனி கோயில்கள் கொண்டிருந்தாலும் வெறும் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார்.

இவருக்கு பல்வேறு சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளது. அப்படி சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் புளியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயில். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை கொண்ட திருக்கோயிலாக இந்த முந்தி விநாயகன் திருக்கோயில் விளங்கி வருகின்றது.

தலத்தின் பெருமை

 

சங்கடஹர சதுர்த்தி, சித்திரை திருநாள் என அனைத்து திரு நாட்களிலும் இங்கு விநாயகருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் வேண்டுதலை அப்படியே இந்த விநாயகப் பெருமான் நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது.

தினமும் இந்த விநாயகருக்கு 3 டன் எடை கொண்ட மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரம் செய்யப்படுகின்றது. விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு 5 டன் எடை கொண்ட காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்படுவது மிகப்பெரிய சிறப்பாகும். நவராத்திரி திருநாளில் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகருக்கு செய்யப்படும் ராஜ அலங்காரத்தை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாக இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விக்ரகம் விளங்கி வருகின்றது. இவருடைய நெற்றி மட்டுமே இரண்டடி அகலம் ஆகும். நான்கு திருக்கரங்கள் கொண்ட இவர், வலது முன் கரத்தில் தந்தமும், பின்கரத்தில் அங்குசமும் இடது பக்கம் முன்புறத்தில் இருக்கக்கூடிய கரத்தில் பலாப்பழமும், அதே பக்கத்தில் பின்பக்கத்தில் இருக்கக்கூடிய கரத்தில் பாசக்கயிறு கொண்டு முந்தி விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

 

மிகப்பெரிய உருவம் கொண்ட இந்த விநாயகர் பெருமானின் நெற்றி மட்டும் இரண்டு அடி அகலம் கொண்டதாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த முந்தி விநாயகர் திருக்கோயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உருவம் கொண்டவராக திகழ்ந்து வருகின்றார்.

இந்த விநாயகர் 19 அடி பத்துவங்களை உயரம் கொண்டவராகவும், 11 அடி பத்து அங்குள்ள அகலம் கொண்டவராகவும் திகழ்ந்து வருகின்றார். கிட்டத்தட்ட இந்த விநாயகர் 190 டன் எடை கொண்டவர் ஆவார். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஊத்துக்குளி என்ற இடத்தில் 20 அடி ஆழத்திலிருந்து எந்த பாதிப்பும் ஏற்படாது சிறப்பான பாறைகளை தேர்வு செய்து வெட்டி எடுத்து 21 சிற்பக் கலைஞர்கள் சேர்ந்து உழைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளனர்.

இந்த சிலையை எடுத்து வருவதற்காக தனி வாகனம் உருவாக்கி அதிலிருந்து கோயிலுக்கு எடுத்து வந்துள்ளனர். மேலும் கர்ப்ப கிரகத்தில் வைப்பதற்காக பிரத்தியேகமாக சாய்வு தளம் உருவாக்கப்பட்டு 18 நாட்கள் சிரமப்பட்டு படுக்கை பாட்டில் சரியான அமைப்பில் நுணுக்கமாக வேலை செய்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த சிலையின் எடையானது ஒரு லட்சத்து 90 ஆயிரம் கிலோ ஆகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாக முந்தி விநாயகர் திகழ்ந்து வருகின்றார்.

அடுத்த செய்தி