Senna Sundal: விநாயகர் சதுர்த்தி - பேச்சிலர்களும் செய்யலாம் சென்னா சுண்டல்!
விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு, பேச்சிலர்கள் எளிமையான முறையில் செய்து இறைவனுக்குப் படைக்கும் சென்னா சுண்டல் பற்றி காண்போம்
விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு, பலரும் விநாயகருக்குப் பிடித்த உணவுகளைப் படைத்து வழிபடுவர். அப்படி, வீட்டில் குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியினை கொண்டாட முடியாத பேச்சிலர்கள், ஒரு எளிய உணவினை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம். அப்படி, சில நிமிடங்களில் செய்து முடிக்கும் ஓர் உணவு தான், சென்னா சுண்டல்.
தேவையான பொருட்கள்:
சுண்டல் - 200 கிராம்;
உப்பு -சிறிதளவு;
நீர் - 400 மி.லி;
நல்லெண்ணெய் - சிறிதளவு,
வெள்ளைப்பூண்டு - 2 பல்,
துருவிய தேங்காய் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - 2 டீஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ண அளவு(200 கிராம்), சுண்டலை குறைந்தபட்சம் 2 மணி நேரம் பாத்திரத்தில் வைத்து ஊறவைத்துக் கொள்ளவும். பின், அதில் நீரை நீக்கிவிட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும். இதையடுத்து, சுண்டலை, இரண்டு பங்கு நீர் சேர்த்து குக்கரில் 6 விசில் விட்டு இறக்கிவைத்துக்கொள்ளவும். அதன்பின், ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்கவும். அதில் ஒரு காய்ந்த மிளகாயினையும், இரண்டு வெள்ளைப்பூண்டு, சிறிதளவு தேங்காய்த்துருவல், சிறிதளவு கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். அதன்பின், வேகவைத்த சுண்டலை, தாளித்த தேங்காய்த்துருவல் மற்றும் சில பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கிளறிக்கொள்ளவும். இப்போது கம கம சென்னா சுண்டல் தயார்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்