Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்தி விழாவின் பின்னணியும் வரலாறும்!
- நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைந்துள்ளது. இந்த திருவிழா பற்றி சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்
- நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைந்துள்ளது. இந்த திருவிழா பற்றி சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்
(1 / 7)
விநாயகர் கடவுளுக்கு அர்பணிக்கும் விதமாக 10 நாள்கள் கொண்டாடப்படும் விழாதான் விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டுக்கான விழாவானது ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இந்து சந்திர நாள்காட்டியில் பத்ரபதா மாதத்தின் நான்காவது நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மிகப் பெரிய திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நாடே திரும்பி பார்க்கும் விதமாக மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருக்கும்
(2 / 7)
யானை முகத்தினை என்ற அழைக்கப்படும் விநாயக கடவுளின் பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த மகன்தான் விநாயகர்
(3 / 7)
இந்த நாள்காட்டியின்படி பத்ரபதா மாதத்தில் வளர்பிறை காலமான சுக்ல பக்ஷத்தில் விநாயகர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக சுகல சதுர்த்தி, அதாவது வளர்பிறையின் நான்காவது நாளில் இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது
(4 / 7)
விநாயக சதுர்த்தி நாளன்று செய்யும் சடங்குகளில் ஒன்றாக ஷோடஷோபச்சாரா இருந்து வருகிறது. இது அந்த நாளில் விநாயக பெருமானுக்கு செலுத்தும் 16 வகை காணிக்கையாகும்
(5 / 7)
விநாயக பெருமானுக்கு பிடித்த இனிப்பு பலகாரமான கொளுக்கட்டையை அந்த நாளில் பக்தர்கள் பிரசாதமாக படைப்பார்கள். இதுதவிர பருப்பு போளி, சுண்டல் உள்பட பல்வேறு பலகாரங்களும் கடவுளுக்கு படைத்து பிரசாதமாக வழங்குவார்கள்
(6 / 7)
விநாயகருக்கு ஏன் யானை தலை உள்ளது என்பதை விளக்கும் விதமாக புராண கதை ஒன்று உள்ளது. பார்வதி குளித்துக்கொண்டிருக்கும்போது, விநாயகரை யாரும் வந்து பார்த்திடாத வண்ணம் பாதுகாப்புக்காக நிற்க வைத்துள்ளார். வெகு தொலைவில் சென்றிருந்த சிவன் மீண்டும் திரும்பயிருப்பது பற்றி அறிந்திடாத விநாயகர், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன் தன் கையில் இருந்த சூலத்தை வைத்து விநாயகர் தலையை துண்டித்தாரம். இதைப்பற்றி அறிந்த பார்வதி கடுமையான துயரம் அடைந்துள்ளார். அவரது துயரத்தை கண்ட சிவன் விநாயகர் மீண்டும் உயிர்த்தெழுவார் என சத்தியம் செய்துள்ளார். வடக்கு திசை நோக்கி சென்ற அவர் அங்கு முதலில் பார்த்த உயிரினமான இறந்து கிடந்த யானையின் தலையை எடுத்து விநாயகருக்கு மாட்டியதாக கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்