தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Petrol Diesel Price : பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

Petrol Diesel Price : பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

Divya Sekar HT Tamil
Jan 28, 2023 06:36 AM IST

இன்றைய (28.01.2023) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து இந்தச் செய்தியில் காணலாம்.

 பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறித்த அறிவிப்பு ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வெளியாகும். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருளின் விலையில் மாறுபாடு இருக்கலாம்.

ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலமும், மாவட்டங்களுக்கு மாவட்டங்களிலும் எரிபொருள் விலையில் சற்றே முன் பின் மாறுபாடு இருக்கக் கூடும். அதன்படி, சென்னையில் இன்று (ஜனவரி.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 விற்பனையாகிறது. 252ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தைப் பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் மாற்றம் ஏற்படும்.

 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

``உக்ரைன் - ரஷ்யா போரை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவு ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது" என கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பாண்டுகளை வழங்கியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா

இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை தான் சார்ந்து நமது நாடு உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கு இடையே மாறுபாடு உள்ளது.

நமது நாடு தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது.

மாற்று என்ன?

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டேதான் இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. இதற்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

மின்சார வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிக்கும் நோக்கில் 100 சதவீத வரி விலக்கை தமிழக அரசு அளிக்க முன்வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரிகளைப் பயன்படுத்தி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு 2025-ம் ஆண்டு வரை 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்