தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எச்சரிக்கை மக்களே : திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று - கொரோனா குழு பரவலா?

எச்சரிக்கை மக்களே : திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று - கொரோனா குழு பரவலா?

Priyadarshini R HT Tamil
Apr 12, 2023 12:06 PM IST

Corona Update : திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, குழு பரவல் துவங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான அதிக பரிசோதனைகள் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் (அதன் மூலமே நோயாளிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு, தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கழிவுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வதும் பாதிப்பை முன்கூட்டியே அறிய முடியும்) அதிகம் செய்வதை விட்டுவிட்டு, நோய் தடுப்பிற்கு பெரிதளவு பயன்படாத சோதனைப் பயிற்சியை செய்வது தேவையற்றது. மேலும் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையும், தீவிர சிகிச்சைப்பிரிவு தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

குழு பாதிப்பு தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், நேற்று திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் தங்கள் மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவமனைகளுக்கு செல்லும்போது பரவியிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் வெள்ளக்கோவிலில் கொரோனா பாதித்து இறந்த ஒருவரின் மனைவிக்கும் தொற்று ஏற்ப்ட்டுள்ளது. 

எனவே குழு பாதிப்பு இல்லை என்றும் கூற முடியாது. மேலும், பரிசோதனைகளை அதிகரிக்காமல், குழு பாதிப்பு இல்லை என்பதையும் கூற முடியாது. அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெளிவாகக் கொடுக்கப்படுகின்றன. அதுபோல் தமிழகத்திலும் அனைத்து விவரங்களையும் அரசு வழங்கி, அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பரிசோதனைகளை அதிகரிக்காமல் இருந்தால், பரிசோதனைகள் செய்து ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தவில்லை எனில் வைரஸ் பிறருக்கு பரவி, பல்கிப் பெருகும். அப்போது மீண்டுமொரு ஒரு உருமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால்தான், அதைத் தடுக்க அதிக பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

ஏற்கனவே T5471, S494P உருமாற்றங்கள் XBB.1.16ல் நிகழ்ந்துள்ளது. மேலும் உருமாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பரிசோதனைகளை தமிழக அரசு அதிகப்படுத்தாமல் இருந்தால், வைரஸ் பல்கி பெருகி மேலும் உருமாற்றம் பெறும். ஒமிக்ரான் உபவகை வைரசில், ஸ்பைக் புரதத்தில் மட்டும் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46. (TPR-10 சதவீதம் - மாநிலத்திலேயே மிக அதிகம்).

செங்கல்பட்டில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள்- ஒரு லட்சம் பேருக்கு 14 என்பதாகும். ஆனால் 12 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு லட்சம் பேருக்கு 5 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. திருச்சியில் ஒரே நாளில் 7 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் லட்சத்துக்கு 4 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்படுகிறது. 

கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை. மொத்தத்தில் தமிழகம் முழுதும் லட்சத்தில் 5 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகளை தமிழக அரசு தேவைக்கேற்ப அதிகரிக்காமல் இருந்தால், வைரஸ் பல்கி பெருகி உருமாற்றம் அடைந்துவிடும். சில வகை உருமாற்றங்கள் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்