Sasikala visit Kodanadu: ’7 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடநாடு செல்லும் சசிகலா!' இதுதான் விஷயம்!-today after 7 years sasikala moves to koda nadu estate in ooty - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sasikala Visit Kodanadu: ’7 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடநாடு செல்லும் சசிகலா!' இதுதான் விஷயம்!

Sasikala visit Kodanadu: ’7 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடநாடு செல்லும் சசிகலா!' இதுதான் விஷயம்!

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 03:21 PM IST

”கடைசியாக 2016ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது”

7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார்
7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார்

கடந்த 2016ஆம் ஆண்டு செம்டம்பர் 22ஆம் தேதி அன்றய முதலமைச்சர் ஜெயயலிதா உடல்நலக்குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் நாட்கள் நீடித்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 

அவரை முதலமைச்சராக்கும் நோக்கில், அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து அவரை அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பு காரணமாக சசிகலா, இளவரசி, சுதாரன் உள்ளிட்டோருக்கு 4ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டில் கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலையான நிலையில் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வருகிறார். 

மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தாம்தான் எனக் கூறி அவர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று வரை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை சசிகலா கொடநாடு பங்களாவுக்கு செல்ல உள்ளார். எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதாவின் சிலையை வைக்க வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடைசியாக 2016ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.