தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  The Incident Of Killing A Friend By Slitting His Throat Near Nagai

Nagai Murder : கொடூரம்.. நண்பன் காதலியை அடைய நினைத்த டீ மாஸ்டர்.. கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்!

Divya Sekar HT Tamil
Jan 12, 2024 11:07 AM IST

நாகை அருகே காதலியை அடைய நினைத்த நண்பனை கோயில் வாசலில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை டீ மாஸ்டர் கொலை
நாகை டீ மாஸ்டர் கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து உடனடியாக வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவிச்சந்திரனின் நண்பன் தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகனும் கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனும் பகலில் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. மேலும் இரவு ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கும் நடைவண்டி மோகனை அழைத்துச் சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நேற்று இரவு ரவிச்சந்திரன், மோகன் மற்றும் அவரது நண்பர் ஞானபிரகாசம் ஆகியோர் கூட்டாக மது அருந்தி உள்ளனர். அப்போது மோகனின் காதலி குறித்து ரவி அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் மோகன் தனது நண்பன் ஞானபிரகாசனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கொலை செய்த மோகன், கொலைக்கு உடந்தையாக இருந்த கருவேலங்கடை பகுதியைச் சேர்ந்த ஞானபிராகசம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில்,நண்பர்களான 3 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது, ஒரு நண்பனின் காதலி குறித்து டீ மாஸ்டர் ரவிச்சந்திரன் அவதூறாக பேசியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் அவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

 

WhatsApp channel

டாபிக்ஸ்