Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை.. உங்களுக்காக இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை.. உங்களுக்காக இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை.. உங்களுக்காக இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 16, 2024 01:41 PM IST

Morning Top 10 News: மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு, இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு உள்பட இன்றைய டாப் 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளவை குறித்து பார்ப்போம்.

டாப் 10 செய்திகள்
டாப் 10 செய்திகள்
  • 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் 3 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய அலுவலகமான டெல்லியில உள்ள விஞ்ஞான பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. மேலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
  • சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள், துர்யா ஓட்டல் முன் U டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லலாம். அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், உலக வர்த்தக மையத்தின் முன் U டர்ன் செய்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
  • தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது விரைவு பேருந்துகளின் இருக்கைகளை 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் அறிவித்துள்ளார்.
  • இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் பகுதியில் 5ஆவது நாளாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. 12 ஆம் தேதி தொடங்கிய காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் திணறி வருகின்றனர். வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் ஏக்கர் கணக்கில் பல்வேறு பழமையான மரங்கள் சேதமடைந்துள்ளன.
  • உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறும்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அண்மைக் காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
  • இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் உருக்குலைந்த காஸாவில் உள்ள அல்-பாருக் மசூதி அருகே ரமலான் நோன்பையொட்டி வெள்ளிக்கிழமையான நேற்று ஏராளமான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர் தாக்குதலால் கடும் துயரத்திற்கு ஆளான தங்களுக்கு உரிய உதவிகளையும், ரமலான் நோன்பு முடியும் வரை போர் நிறுத்தம் மேற்கொள்ள அழுத்தம் தர வேண்டும் என்றும் காசா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஒரு சில தொகுதிகளில் மட்டும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இலங்கையில் சீனாவின் ராணுவ தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவலை, இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் மறுத்துள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.