Top 10 News: போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் 44 மின்சார ரயில்கள் ரத்து வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் 44 மின்சார ரயில்கள் ரத்து வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் 44 மின்சார ரயில்கள் ரத்து வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்!

Karthikeyan S HT Tamil
Mar 03, 2024 06:50 AM IST

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய டாப் 10 செய்திகள் (மார்ச் 03)
இன்றைய டாப் 10 செய்திகள் (மார்ச் 03)

ஆவின் சார்பில் விற்பனை செய்யப்படும் சில ஐஸ்கிரீம் வகைகளின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் இந்திய நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ் என்பவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

5 அணிகள் பங்கேற்றுள்ள 2ஆவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

மத்திய காசா பகுதியில் உள்ள வீடுகள்மீது இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெற்றோர் குழந்தைகளுக்கு வேளாண்மை கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.