தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ed Raid: ஆக்‌ஷனில் இறங்கிய அமலாக்கத்துறை! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை தரக்கோரி நீதிமன்றத்தில் மனு!

ED Raid: ஆக்‌ஷனில் இறங்கிய அமலாக்கத்துறை! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை தரக்கோரி நீதிமன்றத்தில் மனு!

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 12:23 PM IST

”அமலாக்கத்துறை மனுவை பரிசீலனை செய்த புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உத்தரவிட்டுள்ளது”

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவின் இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியதாக கூறபப்ட்டது. முன்னதாக அவர் மீது "குட்கா ஊழல்" வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், அமலாக்கத்துறை சோதனையை அதிமுக சார்பில் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். 

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், ஜிபிஎஸ், ட்ரோன் மூலம் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால் என்ன நடந்தது. அமலாக்கத்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. கூட்டணிக்கு சென்றால் ஒரு நிலைப்பாடு, கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் ஒரு நிலைப்பாடு என விமர்சனம் செய்யும் அளவுக்கு அமலாக்கத்துறை நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணிக்கு அதிமுக சென்றிருந்தால் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்காது என சொல்லும் அளவுக்குத்தான் இந்த நடவடிக்கைகள் உள்ளது என கூறி இருந்தார்.  

வழக்கின் பின்னணி

கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்கள், இலப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவருக்கு சொந்தமான கல் குவாரி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை இரண்டு நாள்கள் நடைபெற்ற நிலையில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் உள்பட பல்வேறு விஷயங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து விஜயபாஸ்கர் மீது கடந்த 2021 அக்டோபரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரூ.39. 79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை மனு! 

இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திஅய் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விவரங்களை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மனுவை பரிசீலனை செய்த புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உத்தரவிட்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்