தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Silambam World Record : கண்கள், கால்களைக் கட்டிக்கொண்டு 30 நிமிடம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

Silambam World Record : கண்கள், கால்களைக் கட்டிக்கொண்டு 30 நிமிடம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

Priyadarshini R HT Tamil
May 01, 2023 12:12 PM IST

Silambam World Record : திருமங்கலம் அருகே கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் சிலம்பம் சுற்றி மாணவ. மாணவிகள் சாதனை
கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் சிலம்பம் சுற்றி மாணவ. மாணவிகள் சாதனை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் டி.கல்லுப்பட்டி கள்ளிக்குடி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 110 மாணவ, மாணவிக்ள பங்கேற்று கண்கள். கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்ப கலையின் உள்சுத்து, வெளிச்சுத்து, கிறுக்கி, பகிழ் உடான், நாலடி, தலை வெட்டு, முன் கம்பு பின்னல் பிரித்தல், பின்கம்பு பின்னல் பிரித்தல், உள்சுத்து கை மாற்றுதல், வெளிச்சுத்து கை மாற்றுதல், நான்கடி கை மாற்றுதல் தொடு முறை சுற்றுதல் என பல்வேறு பிரிவுகளை 30 நிமிடத்தில் செய்து காண்பித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

உலக சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் வினோத்குமார் என்பவர் மூலமாக சாதனை புரிந்ததற்கான சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

இச்சாதனை புரிவதற்காக மாணவ, மாணவிகள் மூன்று மாதங்களாக கடினமான பயிற்சி மேற்கொண்டு வந்ததாகவும், தங்களது குழந்தைகள் உலக சாதனை படைத்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு அவர்கள் படிக்கும் வயதிலேயே படிப்புடன் கூடுதலாக உடற்பயிற்சிகள் செய்ய ஊக்குவிப்பது சிறந்த ஒன்றுதான். அவர்களுக்கு உடல் பலம் மற்றும் மன பலத்தை அதிகரிக்க உதவும். குறிப்பாக சிலம்பம் உடலினை உறுதி செய்வதுடன், மனதையும் ஒருமுகப்படுத்தும். இது தமிழர்களின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றாகும். 

இதை பள்ளி பருவத்திலே மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது, அது இளம் தலைமுறையினரின் ஆற்றலை வளர்க்க உதவுகிறது. மேலும் அதில் இதுபோன்ற சாதனை நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும்போது, அவர்களுக்கு பிற்காலத்திலும் சிறந்துவிளங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்று பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்