BJP Vs DMK: 'மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரத்தால் சர்ச்சை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp Vs Dmk: 'மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரத்தால் சர்ச்சை!

BJP Vs DMK: 'மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரத்தால் சர்ச்சை!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 28, 2024 01:58 PM IST

மோடி விளம்பரத்தில் சீன ராக்கெட் படத்துடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திமுக பெரிதாக மாறவில்லை
திமுக பெரிதாக மாறவில்லை (dmk)

பிரதமர் மோடி இன்று குலசேகர பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்த நிலையில் அதற்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதா கிருஷ்ணன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த விளம்பரம் இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி உள்ளிட்ட முன்னணி தமிழ் நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. இந்த விளம்பரத்தின் பின்னணியில் உள்ள ராக்கெட்டில் இந்திய ராக்கெட்டுக்கு பதிலாக சீனாவின் கொடியுடன் இருந்த ராக்கெட் படம் இடம்பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்  சீன ராக்கெட் பயன்படுத்தப்பட்டது திமுகவின் சீனா மீதான திமுகவின் விஸ்வாசத்தையும், நமது நாட்டின் இறையாண்மையை திமுக முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

"திமுக அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் விஸ்வாசத்தையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

விரக்தியின் அளவு அவர்களின் கடந்த கால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது, ஆனால் திமுகவால்தான்சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் உள்ளது. ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதற்கு திமுகவே காரணம் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

இஸ்ரோவின் 1வது ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடு இருந்தது. கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாத அப்போதைய தமிழக முதல்வர் திரு அண்ணாதுரை, தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தார்.

இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர், இறுதியாக மதியழகன் "குடி போதையில் நிதானம் இல்லாத நிலையில்" கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் சரியான நிலையில் இல்லாத காரணத்தால் கூட்டம் முடியும் வரை குழப்பம் ஏற்பட்டது. மேலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்தை கையாண்ட விதம் இதுவாகும்.

திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது!" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான இந்த விளம்பரம் குறித்து நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சத்து பேசி உள்ளார். சீனா கொடி, சீன ராக்கெட்டை வைத்து விளம்பரம் செய்கிறது திமுக என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இதிலிருந்து இந்தியாவின் மீது திமுகவிற்கு உள்ள பற்று என்ன என்பதை இந்த விளம்பரமே காட்டுகிறது என்று கடுமையாக சாடி உள்ளார்.

மேலும் நெல்லையில் பேசிய அண்ணாமலை, இன்று காலை திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பத்திரிகை விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் சைனா நாட்டின் ராக்கெட்டை போட்டு விளம்பரம் செய்திருக்கின்றனர். ஒரு பக்கம் பிரதமர் நேற்று திருவனந்தபுரத்தில் விண்வெளிக்கு செல்லக்கூடிய 4 இந்தியர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இங்கு சைனா காரன் படத்தை போடுகிறார்கள் இதிலிருந்து நாட்டுக்காக 142 கோடி மக்களுக்காக யார் இருக்கிறார்கள். கோபால புரத்திற்காக யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.