Kamal Haasan: 'அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால்'-உதயநிதி கருத்துக்கு கமல் ஆதரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kamal Haasan: 'அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால்'-உதயநிதி கருத்துக்கு கமல் ஆதரவு

Kamal Haasan: 'அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால்'-உதயநிதி கருத்துக்கு கமல் ஆதரவு

Manigandan K T HT Tamil
Sep 07, 2023 09:49 PM IST

இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. வட இந்தியாவிலும் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்

சனாதனம் என்பது கொரோனா போன்றது அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. வட இந்தியாவிலும் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

அவரது கருத்தை பின்வாங்க வேண்டும் என வடஇந்தியாவில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. அவரது கருத்து தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களை வைத்து சில மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், எந்த வழக்கையும் சந்திக்க தயார். நான் கூறிய கருத்தை பின்வாங்க மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், இவரது கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள், மிரட்டல் உத்திகள், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அவரது வார்த்தைகளை திரித்துக் கூறுவதற்குப் பதிலாக, சனாதனம் குறித்த விவாதத்தில் ஈடுபடுவது முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நடிகர் சத்தியராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்மாள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கோவையில் காலமானார். அன்றைய தினம் திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா நாதாம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள நடிகர் சத்யராஜின் வீட்டிற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.