CNX Opinion Poll 2024: நாடாளுமன்றத் தேர்தல்! 39க்கு திமுக 19! அதிமுக 9! தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்!
”தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்றும் அதில் 19 தொகுதிகள் வரை திமுகவே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சி.என்.எக்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 318 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாஜக மட்டும் தற்போது வென்றுள்ள 303 தொகுதிகளின் பலம் 290 தொகுதிகளாக குறையும் என்றும் 50 தொகுதிகளாக உள்ள காங்கிரஸ் கட்சியின் பலம் 66 தொகுதிகளாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
