தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Transformer Scam: 'தமிழ்நாட்டுக்கு ஒரு விலை.. ராஜஸ்தானுக்கு ஒரு விலையா? ரூ.400 கோடி எங்கே என அறப்போர் கேள்வி!

Transformer Scam: 'தமிழ்நாட்டுக்கு ஒரு விலை.. ராஜஸ்தானுக்கு ஒரு விலையா? ரூ.400 கோடி எங்கே என அறப்போர் கேள்வி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 11, 2023 09:28 AM IST

அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காரணம் யார்? இந்த இழப்பினால் லாபம் அடைந்தவர்கள் யார்? இந்த டெண்டர்களை கவனித்துக் கொள்ள தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த காசியை சட்ட விரோதமாக பணியில் இணைத்தது யார்?

அறப்போர் இயக்கம் கேள்வி
அறப்போர் இயக்கம் கேள்வி

ட்ரெண்டிங் செய்திகள்

"அறப்போர் இயக்கத்தின் ஒப்பீடு சரியில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பரிதாபமான பதிலை கொடுத்து சமாளிக்க முயற்சி செய்துள்ளார்கள். நாங்கள் தமிழ்நாட்டில் தரமான காப்பர் சுருளி பயன்படுத்துகிறோம். ஆனால் அறப்போர் இயக்கம் தரம் குறைந்த அலுமினியம் சுருளி பயன்படுத்தும் டிரான்ஸ்பார்மர்கள் விலையுடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள் என்று மக்களை குழப்பி இருக்கிறார்கள்.

ஆகையால் அறப்போர் இயக்கத்தின் புகாரில் உள்ள விவரங்களை இங்கே மறுபடியும் நினைவுப்படுத்த விரும்புகிறோம். தமிழ்நாட்டில் காப்பர் சுருளி பயன்படுத்தும் 250 KVA டிரான்ஸ்பார்மர்கள் வாங்கிய விலையுடன் ராஜஸ்தானில் அதே மாதத்தில் அதே specificationகளுடன் கூடிய காப்பர் சுருளி பயன்படுத்தும் 315 KVA டிரான்ஸ்பார்மர்களின் குறைந்தபட்ச டெண்டர் விலையை ஒப்பிட்டுள்ளோம். 

இறுதி செய்யப்பட்ட விலை இதை விட குறைவு. ஆனால் வித்தியாசத்தை பாருங்கள். ஒரு டிரான்ஸ்பார்மருக்கு 1.81 லட்சம் கூடுதலாக கொடுத்து தமிழக மின்சார வாரியம் 2000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி இருக்கிறார்கள். இது போல் 10 டெண்டர்கள் ஆய்வு செய்ததில் அனைத்திலும் லட்சக்கணக்கில் அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 400 கோடி தமிழக அரசுக்கு இழப்பு.

ஆனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காரணம் யார்? இந்த இழப்பினால் லாபம் அடைந்தவர்கள் யார்? இந்த டெண்டர்களை கவனித்துக் கொள்ள தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த காசியை சட்ட விரோதமாக பணியில் இணைத்தது யார்? அலுவலகம் வராமல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று காசி தினமும் என்ன வேலை பார்த்தார்? இந்த முறைகேடுகள் நடந்து கொண்டிருந்த போது இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ராஜேஷ் லக்கானி என்ன செய்து கொண்டிருந்தார்?

வழக்கு போட்டு விசாரணை நடத்தினால் தானே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்..! முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடுவாரா?"  என்று கேள்வி எழுப்பி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்