தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஹெல்மெட்டை தூக்கி எரிந்து ஆவேசம் அடைந்த ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் கண்டனம்!

ஹெல்மெட்டை தூக்கி எரிந்து ஆவேசம் அடைந்த ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் கண்டனம்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2023 12:20 PM IST

கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்று இருந்தபோது பந்தை பேட்டில் கூட வாங்காமல் பைஸ் ரன்னில் ஓடி தப்பித்தோம் பிழைத்தோம் என ரீச் ஆகி லக்னெள பெற்ற த்ரில் வெற்றிக்கு காரணமாக இருந்தார் ஆவேஷ் கான். இதற்காக அவர் தனது ஹெல்மெட்டை ஆவேசமாக கழட்டி வீசிய சம்பவத்தால் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஹெல்மெட்டை தூக்கி எரிந்து ஆவேசத்தை வெளிப்படுத்திய லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான்
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஹெல்மெட்டை தூக்கி எரிந்து ஆவேசத்தை வெளிப்படுத்திய லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுபற்றி ஐபிஎல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான், ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2 லெவல் 1 குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

லெவல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஆட்டத்தின் ரெப்ரி முடிவே இறுதியானது. அந்த வகையில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஆவேஷ் கான் கண்டிக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையிலான போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது லக்னெள அணி. கடைசி பந்தில் 1 ரன் தேவை என்று இருந்தபோது, ஸ்டிரைக்கில் இருந்த ஆவேஷ் கான் அடிக்க முயற்சித்து பந்த கோட்டை விட்டார். ஆனால் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக் பந்தை சரியாக பிடிக்காமல் தவறவிட, விரைவாக பைஸ் ரன்கள் ஓடி தப்பித்தோம் பிழைத்தோம் என எதிர்புற கிரிஸில் நுழைந்தார்.

இதன் காரணமாக லக்னெள அணி த்ரில் வெற்றியை பெற்றது. வெற்றி பெற்ற பின்னர் தனது தலையில் இருந்த ஹெல்மேட்டை பந்து வீசுவது போல் கையை சுழட்டி மைதானத்தில் வீசினார் ஆவேஷ் கான். அவரது இந்த செயல் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஐபிஎல் ஒழுங்குமுறை குழு அவருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதேபோட்டியில் மெதுவாக குறிப்பிட்ட நேரத்தையும் கடந்த மெதுவாக பந்து வீசியதற்காக ஆர்சிபி கேப்டன் டூ ப்ளெசிஸ்ஸுக்கு போட்டி ஊதியத்திலிருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் நடத்த விதிமீறலில் ஈடுபட்டு இருப்பதால் அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்