தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Htls 2022:சோசியல் மீடியா மிகுந்த சவாலாக உள்ளன- இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

HTLS 2022:சோசியல் மீடியா மிகுந்த சவாலாக உள்ளன- இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

I Jayachandran HT Tamil
Nov 12, 2022 02:15 PM IST

நீதித்துறைக்கு சோசியல் மீடியாக்கள் மிகுந்த சவாலாக உள்ளன என்று இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட்
இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட்

ட்ரெண்டிங் செய்திகள்

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

எதிர்பார்ப்புகள்தான் நாம் எதிர்கொள்ளும் முதல் சவாலாகும்.

இன்றையக் காலச்சூழ்நிலையில் சமூக ஊடகங்கள்தான் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.

ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவிக்கும் எல்லா கருத்துகளும் இறுதியானவை அல்ல. எனவே வழக்கு விசாரணைகளின்போது சுதந்திரமாகப் பேச வேம்டியருக்கிறது.

ஆனால் அப்படிப்பட்டச் சூழ்நிலையில் பேசப்படும் கருத்துகள் உடனுக்குடன் டுவிட்டர், டெலிகிராம் அல்லது இன்ஸ்டாகிராமில் அப்படியே பதிவிடப்பட்டு விடுகின்றன. அதைப் பார்ப்பவர்களும் அதனடிப்படையில் முடிவெடுக்கின்றனர்.

ஒரு நீதிபதி பேசாமல் மௌனமாக இருந்துவிட்டால் அது வழக்கில் முடிவெடுக்கும் தன்மையை அபாயகரமாகப் பாதித்து விடும்.

எனவே தொழில்நுட்ப வளர்ச்சியானது நீதிபதிகள் பாரம்பரியமாக பின்பற்றிய போக்கை மறுஆய்வு செய்வதற்கு உதவுகின்றது.

குடிமக்களுக்கு நீதிபதிகள் தங்களது பொறுப்புகளை உணர்த்த வேண்டியிருக்கிறது.

வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது பற்றி பார்க்க வேண்டும். மாவட்ட அளவில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யவேண்டும். அதுவே குடிமக்களுடனான முதல் பரிவர்த்தனையாகும்.

நீதித்துறை செயலாற்றும்விதம் குறித்து மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு அந்த உரிமையும் இருக்கிறது.

நீதித்துறை திரைமறைவாகச் செயலாற்றினால் அது அரசியல் சாசன இறையாண்மைக்கே ஊறு விளைவித்துவிடும்.

இவ்வாறு நீதிபதி சந்திர சூட் பேசினார்.

IPL_Entry_Point