தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lord Ram Pic: ‘டிஸ்போசிபிள் பேப்பர் தட்டில் கடவுள் ராமர் படம்!’ பிரியாணி கடை உரிமையாளரை கொத்தாக தூக்கிய டெல்லி போலீஸ்!

Lord Ram pic: ‘டிஸ்போசிபிள் பேப்பர் தட்டில் கடவுள் ராமர் படம்!’ பிரியாணி கடை உரிமையாளரை கொத்தாக தூக்கிய டெல்லி போலீஸ்!

Kathiravan V HT Tamil
Apr 23, 2024 05:51 PM IST

”ராமர் படம் பொறிக்கப்பட்டதாகக் கூறப்படும் டிஸ்போஸ்பிள் பேப்பர் பிளேட்டில் வைத்து பிரியாணி விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவக உரிமையாளரை டெல்லி போலீஸார் கைது செய்து உள்ளனர்”

டெல்லியில் ராமர் படம் பொறித்த டிஸ்போசிபிள் பேப்பர் பிளேட்டில் பிரியாணி விற்ற புகாரில் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
டெல்லியில் ராமர் படம் பொறித்த டிஸ்போசிபிள் பேப்பர் பிளேட்டில் பிரியாணி விற்ற புகாரில் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

வட மேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்டதாகக் கூறப்படும் டிஸ்போஸ்பிள் பேப்பர் பிளேட்டில் வைத்து பிரியாணி விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவக உரிமையாளரை டெல்லி போலீஸார் கைது செய்து உள்ளனர். 

பிரியாணி கடைக்காரரிடன் போலீசார் நடத்திய விசாரணையில், கடைக்காரர் ஒரு தொழிற் சாலையில் இருந்து ஆயிரம் டிஸ்போஸ்பிள் பேப்பர் தட்டுகளை வாங்கியது தெரிய வந்து உள்ளது. அவற்றில் நான்கு பேப்பர் பிளேட்டில் மட்டுமே கடவுள் ராமரின் படம் அச்சிடப்பட்டு இருந்தது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. 

"தட்டுகளில் உள்ள ராமர் படம் பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் எங்களிடம் கூறினார், இது தொழிற்சாலை உரிமையாளர்களால் சரிபார்க்கப்பட்டது" என்று அதிகாரி கூறினார்.

கடந்த சனிக்கிழமை மதியம் ராமர் படம் பொறிக்கப்பட்ட தட்டுகளில் பிரியாணி விற்கப்படுவது குறித்து ஜஹாங்கிர்புரியில் இருந்து டெல்லி காவல்துறைக்கு அழைப்பு வந்ததும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

"ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்ற போது, ஒரு சிலர் கடைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டனர். இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்," என்று  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். 

புகாரை அடுத்து பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டார், IPC பிரிவுகள் 107/151 (தடுப்பு தடுப்பு) கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் பிரியாணி கடையில் அவர் விற்பனைக்கு வைத்து இருந்த பேப்பர் தட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

--------------------------------------------------------------

சைபர் கிரைம் மோசடியை தடுக்க ட்ரூ காலர் செயலி உடன் இணந்த குருகிராம் போலீஸ்

சைபர் கிரைம் மோசடிகளை தடுக்க ட்ரூ காலர் செயலி உடன் குருகிராம் போலீசார் கரம் கோர்த்து உள்ளனர்.

குடிமக்களுக்கு பாதுகாப்பான சைபர்ஸ் பேஸை நிறுவுவதற்கும் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் இந்த கைகோர்ப்பு ஏற்பட்டு உள்ளதாக  காவல்துறை தெரிவித்து உள்ளது. 

ட்ரூகாலர், குருகிராம் காவல்துறையுடன் இணைந்து, சைபர் மோசடியைத் தடுப்பது மற்றும் ஆன்லைன் தீங்குகளைப் புகாரளிப்பது குறித்து குடிமக்களுக்குக் கற்பிப்பதற்காக சைபர்வைஸ் பயிற்சி அமர்வுகளை நடத்தும் என்று காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதலாக, ஆள்மாறாட்ட மோசடியை எதிர்த்துப் போராடுவதற்காக சரிபார்க்கப்பட்ட போலீஸ் தொடர்பு எண்களை இணைப்பதன் மூலம் ட்ரூகாலர் குருகிராமில் தனது அரசாங்க சேவைகளை விரிவுபடுத்தி உள்ளது. 

"இந்த ஒருங்கிணைப்பு சரிபார்க்கப்பட்ட எண்களை எளிதில் அடையாளம் காண பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும், இதன் மூலம் ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு இரையாவதற்கான அபாயத்தைக் குறைக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

"சைபர் மோசடியின் தற்போதைய சவால்கள் கவலைக்குரியவை, குருகிராம் காவல்துறை தினமும் சுமார் 100-120 புகார்களைப் பெறுகிறது, சைபர் மோசடி காரணமாக சராசரியாக மாதந்தோறும் ரூ.40 கோடி இழப்பு ஏற்படுகிறது" என்று தெற்கு குருகிராமின் துணை போலீஸ் கமிஷனர் சித்தாந்த் ஜெயின் கூறி உள்ளார். 

ஆன்லைன் மோசடியை எதிர்த்துப் போராட ட்ரூகாலர் செயலி நிறுவனத்துடன் ஏற்கெனவே டெல்லி மற்றும் அசாம் காவல்துறையுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்