தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maharashtra : பகீர்.. திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்.. 6 பேர் பலி.. உள்ளே இருப்பவர்களில் நிலை என்ன?

Maharashtra : பகீர்.. திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்.. 6 பேர் பலி.. உள்ளே இருப்பவர்களில் நிலை என்ன?

Divya Sekar HT Tamil
May 01, 2023 11:37 AM IST

மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

 திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்
திடீரென இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்

ட்ரெண்டிங் செய்திகள்

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக பிவாண்டியில் உள்ள ஐஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், 18 மணி நேரம் கழித்து சுனில் பிசா (38) என்பவரை மீட்புப் படையினர் நேற்று காலை 8 மணிக்கு மீட்டனர். இவரையும் சேர்த்து காயம் அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் சுதாகர் கவாய், பிரவின் சவுத்ரி மற்றும்  திரிவேணி யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உடனடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் கட்டிட உரிமையாளர் இந்திரபால் பாட்டில் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறன்றனர். முதல்கட்ட விசாரணையில், கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், கட்டிடத்தின் மாடியில் சமீபத்தில் புதிதாக செல்போன் டவர் நிறுவியுள்ளனர். அதன் எடை தாங்காமல் கட்டிடம் இடிந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

https://www.facebook.com/HTTamilNews 

https://www.youtube.com/@httamil 

IPL_Entry_Point

டாபிக்ஸ்