தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  China: கல்யாணம் பண்ண தேவையில்லை.. ஆனா குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. காதலிக்க லீவும் தராங்க.. சீன அரசின் புதிய அறிவிப்பு!

China: கல்யாணம் பண்ண தேவையில்லை.. ஆனா குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. காதலிக்க லீவும் தராங்க.. சீன அரசின் புதிய அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
May 01, 2023 12:34 PM IST

சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.

சீன அரசின் புதிய அறிவிப்பு
சீன அரசின் புதிய அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

2021 ஆம் ஆண்டில் சீனாவில் 1000 பேருக்கு 7.52 என்ற குழந்தை பிறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டில் இதன் அளவு 6.77 ஆகக் குறைந்துள்ளது. மேலும் இறப்பு விகிதம், பிறப்பு விகிதத்தைவிட அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இறப்பு விகிதம் 7.18 ஆக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து சீனாவை இந்தியா முந்தியுள்ளது.

சீனாவில் இளைஞர்கள் குறைவாகவும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035-ம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இதனால் சீனாவின் மாகாணங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்தது.

மேலும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.

இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணமாகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொண்டு செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிட்ட அறிவிப்புபடி வாடகை தாய் மூலமும் விருப்பமுள்ள தனிப்பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொடுக்கலாம். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாத பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற சீன அரசின் கொள்கை மாற்றத்தால், செயற்கை கருவூட்டல் மையங்களின் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

https://www.facebook.com/HTTamilNews 

https://www.youtube.com/@httamil 

IPL_Entry_Point

டாபிக்ஸ்