தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Former Dsp Suicide : டிஎஸ்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்.. காரணம் என்ன?

Former DSP Suicide : டிஎஸ்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்.. காரணம் என்ன?

Divya Sekar HT Tamil
May 01, 2023 10:34 AM IST

ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளா வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன்
ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது சரிதா நாயர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வந்தார். அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி ஹரிகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே ஹரி கிருஷ்ணனின் வீடு, பிளாட்டுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஹரிப்பாடு ஏலூர்பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே ஹரிகிருஷ்ணன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந் தார். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்

இது குறித்து தகவல் அறிந்ததும் ஹரிப்பாடு போலீசார் விரைந்து வந்து ஹரிகிருஷ்ண னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே ஹரிகிருஷ்ணனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சோதனை செய்த போது அவரது சட்டை பையில் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று இருந்தது

அதில் உருக்கமான தகவல்களை ஹரிகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அந்த கடிதத்தில் என்ன தக வல் இருந்தது என்பதை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். முன்னாள்துணைபோலீஸ் சூப்பிரண்டு ஹரிகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

IPL_Entry_Point

டாபிக்ஸ்