தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chandrayaan-3: நிலவில் ரோவர் தடம்பதித்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!

Chandrayaan-3: நிலவில் ரோவர் தடம்பதித்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 25, 2023 11:45 AM IST

இன்று விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவில் தடம் பதித்த ரோவர்
நிலவில் தடம் பதித்த ரோவர்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான் - 2 விண்கலம் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்திருந்தாலும் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்காததால் நிலவில் மோதி செயல் இழந்தது. இருப்பினும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் மட்டும் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 615 கோடி மதிப்பீடில் சந்திரயான் - 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்த நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி அளவில் விண்ணில் ஏவியது.

சந்திரயான் -3 விண்கலம் நிலவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் விண்கலத்தின் உயரம் குறைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்சம் 151 கி.மீ தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ என்ற சுற்றுப்பாதையிலும் சந்திரயான் -3 விண்கலம் சுற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று சந்திரயான் -3 இல் உள்ள உந்துவிசைத் தொகுதியில் இருந்து ‘விக்ரம் லேண்டரை’ வெற்றிகரமாக தனியாக பிரித்தனர்.

இந்த நிலையில் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்