தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Adolf Hitler: ’ஹிட்லர் தற்கொலை உண்மையா?’ ஒரு சர்வாதிகாரியும் வளர்ச்சியும்! வீழ்ச்சியும்!

Adolf Hitler: ’ஹிட்லர் தற்கொலை உண்மையா?’ ஒரு சர்வாதிகாரியும் வளர்ச்சியும்! வீழ்ச்சியும்!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 05:00 AM IST

’உயர் குணமுள்ள ஓநாய்’ என்ற பொருள்படும் ஜெர்மன் வார்த்தையான ’அடால்ப்’ என்ற பெயரை தன் பெயரின் முன்னொட்டாக அவர் பயன்படுத்த தொடங்கினார்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர்
ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர்

ட்ரெண்டிங் செய்திகள்

’உயர் குணமுள்ள ஓநாய்’ என்ற பொருள்படும் ஜெர்மன் வார்த்தையான ’அடால்ப்’ என்ற பெயரை தன் பெயரின் முன்னொட்டாக அவர் பயன்படுத்த தொடங்கினார். 

தனது 21ஆம் வயதில் சொந்தமாக படங்களை வரைந்து வணிகர்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் விற்று ஹிட்லர் தனது அன்றாட வாழ்கையை நடத்தி வந்தார். 

ஹிட்லரின் யூத வெறுப்பு 

யூதர்களும் அவர்களின் பொய்களும் என்ற நூலை கிறிஸ்தவ சமயத்தின் ஒரு பிரிவான ’Protestantism’ (சீர்த்திருத்தத் திருச்சபைகள்) - பிரிவின் தந்தை என அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதி இருந்தார். இந்த நூலை வாசித்ததற்கு பின்னர் யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு அடைய காரணமாக அமைந்தது. 

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஒருபுறமும், கம்யூனிச நாடான ரஷ்யா மற்றோரு புறமும் ஜெர்மனி மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்தன.

ஹிட்லரின் வாழ்க்கையின் கடைசி மாதங்கள் நாஜி ஜெர்மனியின் தொடர்ச்சியான இராணுவ தோல்விகளாக மாறியது. 

பதுங்கு குழியில் ஹிட்லர்

ஏப்ரல் 1945 ஆம் ஆண்டில், சோவியத் படை பெர்லினை அடைந்தது. அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு அடியில் உள்ள தனது பதுங்கு குழி வளாகத்தில் தலைமறைவானார். அங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை தனது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் இராணுவ ஆலோசகர்கள் உடன் கழித்தார்.

காதலி உடன் திருமணமும் தற்கொலையும்

ஏப்ரல் 29, 1945ஆம் ஆண்டில், தனது நீண்டகால காதலியான ஈவா பிரவுனை பதுங்கு குழியில் திருமணம் செய்து கொண்டார். 

அடுத்த நாள், ஹிட்லர் தனது கடைசி விருப்பத்தையும், ஒரு அரசியல் அறிக்கையையும் வெளியிட்டார். 

அதில் அவர் போருக்கு யூதர்களைக் குற்றம் சாட்டினார் மற்றும் ஜெர்மனியர்களை தொடர்ந்து போர் செய்ய அழைப்பு விடுத்தார். அட்மிரல் கார்ல் டோனிட்ஸை அவருக்குப் பிறகு அவர் நியமித்தார்.

ஏப்ரல் 30, 1945 அன்று பிற்பகலில், ஹிட்லரும் ஈவா பிரவுனும் பதுங்கு குழியில் இருந்த ஊழியர்களிடம் விடைபெற்று ஹிட்லரின் தனி அறைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஹிட்லரின் உதவியாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது, ஹிட்லர் மற்றும் ஈவா பிரவுன் ஆகியோரின் உடல்கள் சரிந்து கிடப்பதை கண்டனர். ஹிட்லர் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டார், அதே நேரத்தில் ஈவா பிரவுன் விஷம் அருந்தினார்.

ஹிட்லரின் உடல் வெளியில் கொண்டு செல்லப்பட்டு ரீச் சான்சலரி தோட்டத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. சில செய்திகளின்படி, எதிரியின் கைகளில் சிக்காமல் இருக்க அவரது உடலை எரிக்க ஹிட்லர் உத்தரவிட்டார். சோவியத் செம்படை மே 4, 1945 இல் ஹிட்லர் மற்றும் அவரது பரிவாரங்களின் எரிக்கப்பட்ட எச்சங்களை கண்டுபிடித்தது.

விலகாத மர்மம்

ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் 2 பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம். எரிக்கப்பட்ட இரு உடல்களும் ஹிட்லர், ஈவா பிரானுடையது இல்லை. ஹிட்லர் மற்றும் ஈவா பிரானைப் போல தோற்றம் கொண்ட 2 பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் ஹிட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர்.

ஹிட்லரும், ஈவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறோம். ஹிட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் ஹிட்லர்-ஈவா ப்ரவுன் தற்கொலை நாடகம் அரங்கேறியது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர் என்ற கருத்து ஹிட்லரின் தற்கொலை சம்பவத்திற்கு பிறகு தொடந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்