தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paneer Ghee Roast : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்! மங்களூர் ஸ்பெஷல் பன்னீர் நெய் ரோஸ்ட்!

Paneer Ghee Roast : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும்! மங்களூர் ஸ்பெஷல் பன்னீர் நெய் ரோஸ்ட்!

Priyadarshini R HT Tamil
Aug 25, 2023 12:20 PM IST

Paneer Ghee Roast : இதற்கு பயன்படுத்தப்படும் மசாலா சிறப்பு மிக்கது. இது மங்களூர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே வெல்லம் கர்நாடகாவின் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும். எனவே இதில் வெல்லம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. இது தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பன்னீர் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
பன்னீர் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – ஒன்றரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 3

காஷ்மீரி மிளகாய் – 5

கிராம்பு – 3

மிளகு – அரை ஸ்பூன்

புளி – சிறிதளவு

பட்டை – 1

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பன்னீர் – 200 கிராம்

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

கொத்த மல்லித்தழை – கைப்பிடி அளவு

தயிர் அல்லது எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் வர கொத்தமல்லி, சீரகம், சோம்பு, வெந்தயம், வர மிளகாய், காஷ்மீரி மிளகாய், கிராம்பு, மிளகு, பட்டை ஆகிய அனைத்தையும் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் புளி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து பன்னீரை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பன்னீரை எடுத்துவிட்டு அதே நெய்யில், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். இறுதியாக தயிர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். 

பச்சை வாசம் போனவுடன், பன்னீர் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். 2 நிமிடங்கள் மூடி வேகவைத்து, பன்னீரும், மசாலாவும் சேர்ந்து நன்றாக வந்தவுடன், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால், சுவையான மங்களூர் பன்னீர் நெய் ரோஸ்ட் சாப்பிட தயாராகிவிடும்.

இதை நீர் தோசை, பரோட்ட, சப்பாத்தி, நெய்ச்சோறு, ஃப்ரைட் ரைஸ், சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறி சாப்பிடலாம்.

இதில் நாம் காஷ்மீரி மிளகாய் சேர்த்திருப்பதால், அது ஒரு நல்ல நிறத்தை கொடுக்கும். எனவே குழந்தைகள் இதை அதிகம் விரும்பி உண்பார்கள்.

இது மங்களூரில் அதிகம் செய்யப்படுவதால் மங்களூர் ஸ்பெஷல் பன்னீர் நெய் ரோஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. நான் வெஜ் உணவுகளுக்கான மசாலக்கள் சேர்க்கப்படுவதால், இது நான் வெஜ் சுவையிலே இருக்கும். இதை காளான், காலிஃபளவர், ப்ரோகோலி வைத்தும் செய்யலாம்.

இதற்கு பயன்படுத்தப்படும் மசாலா சிறப்பு மிக்கது. இது மங்களூர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே வெல்லம் கர்நாடகாவின் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும். எனவே இதில் வெல்லம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது. இது தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். நிச்சயம் இந்த பன்னீர் நெய் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் வகையில் இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்